கழகத் தலைவர் ஆறுதல்; இரங்கல் தெரிவிப்பு
‘விடுதலை'யில் - பெரியார் திடலில் சில ஆண்டுகளாகப் பணிபுரியும் தோழர்களில் ஒருவரான உசிலம்பட்டி மானமிகு ஜெ.ஆனந்த் அவர்களின் தந்தையார் திரு.ஜெயக்குடி அவர்கள், மதுரை தனியார் மருத்துவமனையில் (4.10.2020) இருதய அறுவை சிகிச்சை நிலையில் காலமானார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியும் மனவேதனையும், துயரமும் அடைந்தோம். அவரது வயது 58. அவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உண்டு.
‘விடுதலை' - பெரியார் திடலின் உண்மை ஊழியரான ஆனந்தும், அவரது குடும்பமும் அடைந்த துயரத்தில் நாமும் பங்கு கொண்டு ஆறுதலும், இரங்கலும் கூறுகிறோம். அவரது உடல் நேற்று எரி யூட்டப்பட்டது. இன்று காலை தோழர் ஆனந்துடன் கழகத் தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலும், அனுதாபமும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment