கல்விப்பூஞ்சோலையில் காவிக்கென்ன வேலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 16, 2020

கல்விப்பூஞ்சோலையில் காவிக்கென்ன வேலை

கல்விப்பூஞ்சோலையில் காவிக்கென்ன வேலை?


அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம்


செய்யக்கோரி தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்



சென்னை, அக். 16- அண்ணா பல் கலைக் கழக துணைவேந்தர் சூரப் பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி திமுக இளைஞரணியினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத் தால் 5 ஆண்டுகளில் ரூ.1500 கோடி நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல் லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.


அண்ணா பல்கலைக்கு நிதி தேவையில்லை என்று மத்திய அர சுக்கு கடிதம் எழுதிய துணைவேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் திமுக சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச் சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால், திமுக இளைஞ ரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவரணி சார்பில் நேற்று அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரி கள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.


அதன்படி, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய கோரி சென்னை கிண்டியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட திமுக இளைஞரணியினர், மாணவரணியினர் பங்கேற் றுள்ளனர். அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்காதே, எங்கள் கல்வி உரிமையை பறிக்காதே என்று முழக்கமிட்டும், இது கல்விப் பூஞ்சோலை; இங்கு காவிக்கென்ன வேலை என்ற பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைபோல், சென்னை தாம்பரம், சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங் களிலும் திமுக இளைஞரணியினர் துணைவேந்தர் சூரப்பாவிற்கு எதி ராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள் ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


No comments:

Post a Comment