பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கம்


கன்னியாகுமரி, அக். 20- "உயர் கல்வி_நிலைப்பாடும் மத்திய மாநில_அரசுகளின் குளறு படிகளும்" என்ற தலைப்பில் 18.10.2020 அன்று  மாலை 4.30 மணிக்கு நாகர்கோவில் ஒழு கினசேரி பெரியார் மய்யத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கம் சார்பில்  சிறப்பு கருத்தரங் கம் நடைபெற்றது.


 பக மாவட்ட தலைவர் உ. சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார், கழக மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன்  தொடக்கவு ரையாற்றினார்.  விண்ணரசு  டி. மத்தியாஸ் சிறப்புரையாற் றினார்.  பக மாவட்ட செயலா ளர் பெரியார் தாஸ் முன் னிலை வகித்தார்.  கழக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எஸ்.அலெக்ஸாண் டர் வரவேற்புரை ஆற்றினார்.  மாநகர துணைத் தலைவர் கவிஞர் செய்க் முகமது கட வுள் மறுப்பு கூறினார்.


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொறுப் பாளர் கு. சந்திரன், செல்வின் சதீஷ் குமார் ஆகியோர் கருத் துரையாற்றினர். அகஸ்தீஸ்வ ரம் ஒன்றிய தலைவர் குமார தாஸ், குருந்தன்கோடு ஒன் றிய அமைப்பாளர் செல் லையா, கிளை செயலாளர் பி.கென்னடி கழகத் தோழர் கள் இசைக் கண்ணன், ராஜ நாயகம் மற்றும் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்க ளின் இட ஒதுக்கீட்டை பறித்து சமூக நீதியை குழிதோண்டி புதைக் கும் மத்திய மதவாத பாஜக அரசைக் கண்டித்து தோழர் கள் அனைவரும் கருத்துக்களை எடுத்துக்கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment