ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க. மாபெரும் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 23, 2020

ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க. மாபெரும் ஆர்ப்பாட்டம்

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க. மாபெரும் ஆர்ப்பாட்டம்


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநரையும் - அதற்கு அழுத்தம் தரத் தவறி, மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.க. அரசையும் கண்டித்து நாளை (24.10.2020) காலை 10 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


 


தமிழர் தலைவர் ஆதரவு


தி.மு.க. அறிவித்துள்ள போராட்டம் வரவேற்கத்தக்க ஒன்று. திராவிடர் கழகம் தனது ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.


- திராவிடர் கழகத் தலைவர், ‘சன்' செய்தி பேட்டி


No comments:

Post a Comment