பெரியார் சிலைக்கு கூண்டு அமைக்கும் முடிவைக் கைவிடுக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 15, 2020

பெரியார் சிலைக்கு கூண்டு அமைக்கும் முடிவைக் கைவிடுக!

மயிலாடுதுறையில் அனைத்துக்கட்சியினர் வலியுறுத்தல்



மயிலாடுதுறை, அக். 15-- மயிலாடுதுறையில் பெரியார் அம்பேத்கர் சிலைகளுக்கு கூண்டு அமைக்கும் முயற்சியை கைவிடக் கோரி அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் மயிலாடு துறை மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளரிடமும், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளரிடமும் 30.9.2020 அன்று பெரியார், அம்பேத்கர் சிலை பாதுகாப்புக்குழு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


தமிழகத்தில் பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளுக்கு கூண்டு அமைக்கும் திட்டத்தை காவல்துறையினர் கைவிட வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீநாதாவிடம், பெரியார், அம்பேத்கர் சிலை பாதுகாப் புக்குழுவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட் டோர் கோரிக்கை மனு அளித்தனர்.


பெரியார், அம்பேத்கர் சிலை பாது காப்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் கழக மாவட்ட தலைவருமான ஆ.ச.குணசேகரன் தலைமையில் மாவட் டச் செயலாளர் கி.தளபதிராஜ், விடு தலைச்சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வேலு.குபேந்திரன், திமுக நகர துணை செயலாளர் தெய்வநாயகம், இந்திய தேசிய காங்கிரஸ் நகர செயலா ளர் ராமகிருஷ்ணன், மதிமுக மாவட்ட தலைவர் ஏ.எஸ்.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் சி.மேகநாதன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஓ.ஷேக் அலாவுதீன், எஸ்.டி.பி.அய் மாவட்ட செயலாளர் ஏ.எம்.ரவூப், தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்பு.மகேசு உள்ளிட்டோர் பங்கேற்று அளித்த மனுவில், தமிழ்நாட்டு மக்கள் அனை வராலும், அனைத்துக் கட்சியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தந்தை பெரியா ரின் சிலைக்கு, புறநகர் பகுதியில் ஒரு சில சமூக விரோதிகள் காவி சாயம் பூசுவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால், தமிழகம் முழுவதும் உள்ள சிலைகளை கூண்டுக்குள் அடைப் பது தலைவர்களின் தொண்டினை அவமானப்படுத்துவதாக உள்ளதாகவும், இந்த முடிவை காவல்துறை மாற்றிக் கொள்ளாவிடில் போராட்டம் நடத்த வேண்டிவரும் எனவும் குறிப்பிடப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment