நாகை, அக். 15- தந்தை பெரியாரின் சிலையின் மீது கூண்டு அமைக்கும் பணியை காவல்துறை முன்னெடுத்து இருப்பதால் அதனை எதிர்த்து தந்தைபெரியார் அண்ணல் அம்பேத்கர் அறி ஞர் அண்ணா போன்றவர் களின் சிலைகளுக்கு கூண்டு அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 10.10.2020 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் மனு கொடுத்தனர்.
இந்நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளர் என்.கவுதமன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்டச் செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் இல.மேகநாதன், மாவட்டத் தலைவர் மு.க.ஜீவா, விடுதலை சிறுத்தை மாவட்டத் துணைச் செயலாளர் அரா.பேரறிவா ளன், முன்னாள் நகர செய லாளர் மாதவன். மறுமலர்ச்சி திமுக பொறுப்பாளர் வழக் குரைஞர் வேதை.இராமச் சந்திரன், திராவிடர் கழக நாகை நகர செயலாளர் தெ. செந்தில்குமார், மாநில மாண வர் கழகத் துணைச் செயலா ளர் நா.பொன்முடி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப் பாளர் இராச.முருகையன், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் மு.குட்டி மணி, மாவட்ட மாணவர் கழகத் துணை தலைவர் மா.ஆதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் சிலையின்மீது காவல்துறை கூண்டு அமைக்கும் பணியை எதிர்த்து நாகை மாவட்டத் தில் தி.மு.க. தலைமையில் அனைத்துக்கட்சி பொறுப் பாளர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு கொடுத்தனர்.
No comments:
Post a Comment