அன்று மெக்சிகோவில் நடந்தது இன்று இங்கு நடக்குமா??
ஆட்சியாளர்களுக்கு எதிரான பெருங்கோபம்
2013ஆம் ஆண்டு மெக்சிகோ அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் உலகின் மிக அதிக மக்கள் தொகையில் இரண்டாமிடமாக உள்ள மெக்சிகோ தலை நகர் மெக்சிகோ சிட்டியை விட்டு ஆயிரக் கணக்கானோர் கால்நடையாக நாட்டின் பல்வேறு மாகாணங்களுக்குச் சென்றனர். அந்த நெருக்கடியான காலகட்டத்தில் கூட அந்த அரசு தனியார் மயத்தில் அதிக அக்கறை காட்டியது,
அப்போது நடந்த நாடாளுமன்ற விவா தத்தின் போது அண்டோனியா கார்சியா என்ற இடதுசாரி புரட்சிக் குடியரசு என்ற கட்சியின் உறுப்பினர், அவையின் மத்தி யில் வந்து தனது ஆடைகளை அவிழ்த்துப் போட்டு நின்றார். அப்போது சபாநாயகர் என்ன இது அவையை அசிங்கப்படுத் துகிறீரே உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்கிறார். அப் போது அவர் “என்னை நிர்வாணமாகப் பார்க்க நீங்கள் வெட்கப்படுகிறீர்கள். உறுப் பினர்கள் தலைகுனிகின்றனர்.
ஆனால் உங்கள் கொள்கையால் மக் களை நிர்வாணமாக, வெறுங்காலுடன், விரக்தியடைந்து, வேலையற்று, பசியுடன் தெருக்களில் திரிவதைப் பார்த்து நீங்கள் வெட்கப்படவில்லை, உங்கள் தனிப் பட்ட பொருளாதார முடிவுகளால் சிலரின் நன்மைக்காக ஒட்டுமொத்த உழைக்கும் மக்களிடமிருந்து ஒட்டுத்துணி கூட இல்லாமல் பிடுங்கிவிட்டீர்களே. இன்று அவர்கள் சாலைகளில் குழந்தைகளோடு செல்கிறார்கள். சிலருக்கு மேலாடை இல்லை. சிலர் குழந்தைகளின் துணிகளைக் கிழித்து உடலை மறைத்துக் கொண்டு நடக் கின்றனர் என்று ஆவேசமாக கூறினார்.
அந்தப்படத்தை 2013ஆம் ஆண்டின் மிகவும் முக்கியப் படங்களுள் ஒன்றாக 'டைம்ஸ் இதழ்' வெளியிட்டிருந்தது,
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா
வில் அதே போன்று ஒரு சூழல் அச்சுப் பிறழாமல் நடந்துள்ளது, நாடாளுமன் றத்தில் எதிர்கட்சியினர் போர்க்கொடி தூக் குவார்கள் என்று தெரிந்தே நாடாளுமன்ற நடவடிக்கையை அவசர அவசரமாக துவக்கி முடித்து விட்டனர். இந்த நெருக் கடியான காலகட்டத்திலும் மக்கள்விரோத வேளாண்மை மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளனர்.
இந்த மசோதாவைக் கொண்டு வர வேண்டாம் என்று அரசியல் தலைவர்கள் விவசாயிகள் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்ட போதிலும் ஆணவத்தின் உச்ச மாக மசோதாவைக் கொண்டு வந்து கரோனா காலத்திலும் மக்களைப் போராட வைத்துவிட்டார் மோடி.
No comments:
Post a Comment