கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி, பல மாதங்களுக்கு நீடிக்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 15, 2020

கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி, பல மாதங்களுக்கு நீடிக்கும்

ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு


வாஷிங்டன், அக்.15 கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி பல மாதங்களுக்கு நீடிக்கும் என்று அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.


இதுபற்றி இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் தீப்தா பட்டாச்சாரியா கூறியதாவது:-


நாங்கள் கரோனாவுக்கு எதிரான தரமான நோய் எதிர்ப்புச்சக்தி, கரோனா தொற்று பாதித்த 7 மாதங்களுக்கு பிறகும் கூட உற்பத்தி செய்யப்படுவதை பார்த் துள்ளோம். கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி நீண்ட காலம் நீடிக்காது என பலரும் கவலை தெரிவித்து இருந்தனர். ஆனால் நாங்கள் இது தொடர்பாக ஆராய்ந்தபோது, நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தது 5 மாதங்கள் நிலைத்து இருப்பதை கண்டறிந்தோம்.


வைரஸ் தொற்று எப்போது முதன் முதலாக செல்களை பாதிக்கிறதோ, அப்போது நோய் எதிர்ப்பு அமைப்பு வைரசை எதிர்த்து போராட நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் குறுகிய கால பிளாஸ்மா செல்களை வரிசைப் படுத்துகிறது. இவை, தொற்று பாதித்த 14 நாட்களுக்குள் ரத்த பரிசோதனை செய்கிறபோது, காணப்படுகின்றன.


இரண்டாவது கட்ட நோய் எதிர்ப்பு மறுமொழியாக, நீண்ட கால பிளாஸ்மா செல்கள் உருவாகின்றன. அவை தரம் வாய்ந்த நோய் எதிர்ப்புச்சக்தியை உரு வாக்குகின்றன. இவைதான் பல மாதங்கள் நீடிக்கின்றன.


கரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தது 5 முதல் 7 மாதங்கள் வரை ரத்தப் பரிசோதனையில் சாத்தியமான அளவுகளில் இருப்பதை நாங்கள் கண்டோம். நோய் எதிர்ப்புச்சக்தி இன்னும் அதிக காலம் நீடிக் கும் என்று நம்புகிறோம்.


இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment