கரோனா காலத்திலும் கழகத் தோழரின் எடுத்துக்காட்டான கழகப் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

கரோனா காலத்திலும் கழகத் தோழரின் எடுத்துக்காட்டான கழகப் பணி

சென்னை, அக். 21- கூடுவாஞ்சேரி கழகத் தோழர் மா.இராசு அவர்கள் இந்த கரோனா தொற்று காலத்திலும், மாதம் இருமுறை ‘விடுதலை' அலுவலகம் வந்து விடுதலையை நேரில் வாங்கிப் படித்து, அதில் உள்ள அரிய செய்திகள், அருமையான தொகுப்பு களை நகல் எடுத்து அதை துண்டறிக்கையாக அவர் வசிக்கும் பகுதியில் பலருக்கும் கொடுத்து, படித்து பயன் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறார்.


குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். பற்றிய அறிவுமதியின் நூல், 5 லட்சம் வழங்கிய மாணவி குறித்த தகவல், கலைஞர் (வ.வே), இயற்கை உணவு குறித்த தகவல், தொழில்நுட்ப பணியாளர் குறித்த கட்டுரை ஆகியவற்றின் துண்டறிக்கை நகல்கள் மற்றும் பெரியார் பிறவாம லிருந்தால், பாவலர் பல்லவன் வாழ்க்கை வரலாறு, ஸ்டாலின் கருத்துகள், மு.சண்முகம் (LPF) செய்திகள், மூவர் போற்றிய மூவர் ஆகிய புத்தகங்களின் நகல்கள் பலருக்கு கொடுத்துள்ளார்.


அவர் வசிக்கும் பகுதியில் ஏழை எளிய நண்பர்கள், கழகத் தோழர்கள், பொது மக்கள் சுற்றத்தினர் ஆகியோர்களுக்கு ரூ.500 வீதம் 12 பேருக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கியுள்ளார்.


சந்தாக்கள் - நன்கொடை


மேலும் அவர் 3 உண்மை சந்தாக்கள், விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500, திருச்சி நாகம்மையார் குழநதைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை, அரையாண்டு விடுதலை சந்தா ரூ.900 தந்துள்ள அவரின் தொண்டறம் பாராட்டத்தக்கது.


No comments:

Post a Comment