ராகுல் காந்தி கடும் சாடல்
புதுடில்லி,அக்.14, உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தாழ்த்தப்பட்ட இளம்பெண்ணை உயர்சாதிக் கும்பல் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்த சம்பவத்தில் பாஜக முதல்வர் யோகி அரசின் செயல்பாடுகளை ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
ஹத்ராஸ் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பாஜக அரசின் செயல்பாடுகள் குற்ற வாளிகள் ஆதரவாகவே உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின் றன. இந்நிலையில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில் அந்த 19 வயதுப் பெண்ணின் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் அதிர்ச்சியால் உயிரிழந் துள்ளார் என்றும் உத்தர பிரதேச காவல்துறை தெரிவித்தது.
இந்தச் செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘தாழ்த்தப்பட்டவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தி யர்கள் மனிதர்களாக கருதுவ தில்லை என்பதே வெட்கப்பட வேண்டிய உண்மை; ஹத்ராஸ் பெண்ணை அவர்கள் ஒரு மனிதராக கருதாததால் தான் யாருமே பாலியல் வன்கொடுமை செய்யப் படவில்லை என முதல்வரும், காவல்துறையினரும் கூறுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment