மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில்  நான்கு மசோதாக்கள் நிறைவேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில்  நான்கு மசோதாக்கள் நிறைவேற்றம்

பஞ்சாப் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பணிந்து போவதைவிட


நான் பதவி விலகத் தயாராக இருக்கிறேன்: முதலமைச்சர் அமரீந்தர்சிங்



சண்டிகார்,அக்.21மத்தியஅரசுகொண்டு வந்த வேளாண் சட்டங்களை முறிய டிக்கும் வகையில் நான்கு மசோதாக்கள் பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டன.


மத்திய அரசின் வேளாண் சட்டங் களை முறியடிக்கும் வகையில்நான்கு மசோதாக்களும்,தீர்மானமும்பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட் டன. மசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரை சந் தித்து முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலியுறுத்தினார்.


விவசாயிகள் ரயில் மறியல்


விவசாயிகள் நலனுக்காக என்று மத்திய அரசு கடந்த மாதம் 3 வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அம்மசோதாக்கள் சட்ட வடிவம் பெற்றுள்ளன.


இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றன. காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.


காங்கிரஸ் தலைவர்


சோனியா காந்தி வேண்டுகோள்


வேளாண் சட்டங்களை முறியடிக்க மாநிலசட்டப்பேரவைகளில்மசோதாக் கள் நிறைவேற்றுமாறு காங்கிரஸ் முதல மைச்சர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத் திருந்தார்.


அதை ஏற்று, பஞ்சாப் சட்டப்பேர வையில் நான்கு மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இதற்காக சிறப்பு சட்டசபைகூட்டத்தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர் மானத்தை முதலமைச்சர் அமரீந்தர் சிங் நேற்று  (20.10.2020) தாக்கல் செய்தார்.


மேலும், அந்த வேளாண் சட்டங் களை முறியடிக்க நான்கு மசோதாக் களையும் அவர் தாக்கல் செய்தார்.


பின்னர், சட்டப்பேரவையில் பேசிய அமரீந்தர் சிங், “வேளாண் சட்டங் களால் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்கும் நோக்கத் திலேயே இந்த மசோதாக்களை தாக்கல் செய்துள்ளோம்.


பஞ்சாப்விவசாயிகளுக்குஇழைக்கப் பட்ட அநீதிக்கு பணிந்து போவதைவிட நான் பதவி விலகத் தயாராக இருக்கிறேன். எனது ஆட்சி கலைக்கப்படுவதை சந்திக் கவும் தயார். இதற்கெல்லாம் நான் பயப் படவில்லை.


வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், நிலைமை கைமீறி போய்விடும். ஆத்திரம் அடைந்துள்ள இளைஞர்கள், தெருவுக்கு வந்து விவசா யிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது.


இதே நிலைமை நீடித்தால், அமைதி யான சூழ்நிலை சீர்குலையக்கூடும். 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டு-களில் அப்படித்தான் நடந்தது. அமைதி சீர் குலைவை சீனாவும், பாகிஸ்தானும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். எனவே, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.


போராட்டம் நடத்தும் விவசாயி களுக்கு நான் முழு ஆதரவு தெரிவிக்கி றேன். வேறு வழியின்றி தங்களை காத்துக்கொள்ள போராடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதே சமயத்தில், ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்களை கைவிட்டு, அவர்கள் மாநில அரசுக்கு உதவ வேண்டும்.


தற்போது, வேறு மாநிலங்களும் நாட்டுக்கு உணவு தானியங்களை அளிக்கத் தொடங்கி விட்டன. எனவே, பஞ்சாப் விவசாயிகளை பிரதமர் புறக் கணிக்கிறார்'' என்று அவர் பேசினார்.


5 மணி நேர விவாதத்துக்கு பிறகு, நான்கு மசோதாக்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.அகாலி தளம், ஆம் ஆத்மி, லோக் இன்சாப்ஆகிய எதிர்க்கட்சிகளும்ஆதரவுஅளித்தன. பாரதீய ஜனதா, இந்தக் கூட்டத்தொடரை புறக்கணித்தது.


அதையடுத்து, காங்கிரஸ், அகாலி தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் சட்டமன்றஉறுப்பினர்களுடன்ஆளு நர் வி.பி.சிங் பட்னோரைமுதலமைச்சர் அமரீந்தர் சிங் சந்தித்தார். நிறைவேற் றப்பட்ட மசோதாக்கள் மற்றும் தீர்மா னத்தின் நகலை ஆளுநரிடம் வழங்கினார். மசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.


No comments:

Post a Comment