நீட்டுக்குமுன் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் எத்தனை? நீட்டுக்குப் பின் கிடைத்த இடங்கள் எத்தனை?
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் குறித்து கேட்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கிடைத்த பதிலில் ‘நீட்' தேர்விற்கு முன்பு வரை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து படித்தனர். ‘நீட்' வந்த பிறகு சில நூறுகளில் இருந்து ஒற்றை இலக்க எண்ணிற்கும் கீழ் இறங்கியது தெரிய வந்துள்ளது.
‘நீட்' தேர்விற்கு முந்தைய ஆண்டான 2016 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 1047 ஆக இருந்தது; நீட் தேர்விற்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 158 ஆக இருந்தது.
2018 ஆம் ஆண்டு வெறும் 3 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அதுவே 2019 ஆம் ஆண்டு வெறும் 4 மாணவர்களாக இருந்தது.
சமூகநீதிக்குச் சவக்குழி வெட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment