உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆணவம்!
புதுடில்லி, அக். 5 ஹத்ராஸில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த முதல்வர் சாமி யார் ஆதித்யநாத், குற்றம் செய்த தாக் கூர்கள் கோபக்காரர்கள் (சூடான ரத்தம் ஓடுகிறது). அவர்களால் சிறிது தவறு நடந்துவிடுகிறது என்று கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் என்ற பகுதியில் தாழ்த்தப்பட்ட 19 வயது மாணவி ஒருவர், நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவ ரது நாக்கையும் அறுத்துள்ளனர். அத்தோடு மட்டு மல்லாமல் அவர் ஓடிவிடாமல் இருக்க அவரது கால்கள் இரண் டையும் சம்மட்டி கொண்டு உடைத்துள்ளனர். பின் னர் அவரது முகெலும்பையும் கோடாரி கொண்டு வெட்டியுள்ளனர். கொடூரமான தாக்குதலுக்கு ஆளான அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடற்கூறு ஆய்வு அறிக் கையைக் கூட சரிவரை பதிவு செய்யாமல் சாட்சிகள் எதுவுமே இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு தண்ணீர் வற்றிய ஓடை ஒன்றில் வைத்து உத்தரப்பிரதேச காவல்துறை யினர் அவரது உடலை எரித்து விட் டனர். அப்பெண்ணின் சமூகத்தைப் பொறுத்தவரை உடலைப் புதைப் பார்கள். ஆனால், குடும்பத்தினர் யாரையுமே உடலின் அருகில் விடா மல் அவசர அவசரமாக நள்ளிரவில், அவரது உடலை எரித்து விட்டனர்.
முதல்வர் சாமியார் ஆதித்யநாத் குற்றவாளிகள் அனைவரும் கொஞ்சம் கோபக்காரர்கள்(தாக்கூர்கள்). அவர்களால் சிறிது தவறு நடந்து விடுகிறது என்று கூறியுள்ளார். ஆதித்திய நாத்தும் அந்த தாக்கூர் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்தான்; குற்றவாளிகளில் சந்தீப் தாக்கூர் மற்றும் லவ்குஷ் தாக்கூர் ஆகிய இருவருமே முதல்வர் ஆதித்ய நாத்தின் உறவினர்கள் ஆவர்.
பாலியல் வன்கொடுமைகளை அரசாங்கம் தடுக்காது: உத்தரப்பிர தேச மதுரா நகர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் திமிர் பேச்சு
பெண்களை ஒழுங்காக பெற் றோர்கள் வளர்க்காதவரை இது போன்ற ஒரு சில நிகழ்வுகளை தடுக்க முடியாது என்று உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒரு வர் கூறியது கடுமையான விமர்ச னத்தை சந்தித்து வரும் நிலையில் மீண்டும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அரசாங்கத்தால் இதை எல்லாம் தடுக்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் பகுதிக்கு அடுத்துள்ள மதுரா நகர் பாஜக சட்டமன்ற உறுப் பினர் சுரேந்திரசிங் கூறும்போது, ‘‘பாலியல் வன்கொடுமைகள் இங் கொன்றும் அங்கொன்றும் நடந்து கொண்டு தான் இருக்கும்,அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி இருந் தாலும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்களைத் தடுக்க முடியாது. மக்கள் பாதுகாப்பாக இருந்துகொள்ளவேண்டும், இல்லை யென்றால் இவ்வாறு நடப்பதற்கு சாத்தியங்கள் உண்டு, அப்படி நடந்து விட்டால், எதிர்க்கட்சிகளும், ஊட கங்களும் இதைப் பெரிதுபடுத்தும் சில நாட்கள் பரபரப்பாக இருக்கும், பிறகு அவரவர்கள் தங்களின் வேலை யைப் பார்த்துச் சென்றுவிடுவார்கள்'' என்று கூறினார்.
No comments:
Post a Comment