"பெரியார் பெருந்தொண்டர் விருது" பெற்ற ஆருர் சபாபதிக்கு ஆசிரியர் கி.வீரமணி பயனாடை அணிவித்தார். உடன் மானமிகு சுப.வீரபாண்டியன்
முதுபெரும் பெரியார் தொண்ட ரும், திருவாரூர் தந்த தியாகபதி, கருஞ்சட்டை அணிந்து வந்தே வணக்கம் தெரிவிக்கும் தோழர் மானமிகு ஆரூர் சபாபதி அவர் கள். தற்போது 84 வயது. ஓர் அறுவை சிகிச்சையில் (நாக்குப் பகுதி) பேச்சில் சற்று சங்கடம் என்றா லும், பொருட்படுத் தாமல் வழக்கமான நகைச்சுவையுடன் பேசிடும், சிங்கப்பூர் தொலைக்காட்சி நடிகர் அவர்.
அவரைப் பார்க்க இல்லம் செல்ல நாங்கள் அனைவரும் விழைந்தோம். அவரோ "இல்லை நானே வந்து பார்க் கிறேன்'' என்றார். சிங்கப்பூரின் மய்யப் பகுதியில் 'தேக்கா' என்ற 'லிட்டில் இந்தியாவில்' உள்ள தோழர் இலியாஸ் அவர்களது "சங்கம் டெக்ஸ்டைல்ஸ் கடைக்கு வருகிறேன். அங்கு வந்து சந்திப்போம்" என்றார். அது பலரைச் சந்திக்கும் ஒரு சந்திப்பு நிலையம் என்றால் மிகையல்ல!
ஆரூர் சபாபதி அங்கே வந்தார். எங்கள் குடும்பத்தவருடன் உரையாடி மகிழ்ந்தார்; மகிழ்ந்தோம். முதுபெரும் பெரியார் தொண்டர் தி. நாகரெத்தினம் அவர்களுடன் இயக்கப் பணியாற்றிய முதுபெரும் தோழர். 50 ஆண்டு காலமாக அறிவேன். எப்போது சென்னை வந்தா லும் பெரியார் திடலைத் தவிர்க்காதவர். கழக நிகழ்ச்சிகளுக்கு வந்து கலந்து கொண்டு, சந்திக்கத் தவறாதவர்.
அவருக்குச் சிறப்புச் செய்து பாராட்டி மகிழ்ச்சி அடைந்தோம் இருபுறத்திலும் அம்மகிழ்ச்சி!
(18.6.2017 விடுதலை நாளிதழ் (வாழ்வியல் சிந்தனைகள் திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி எழுதியது)
No comments:
Post a Comment