பாபர் மசூதி இடிப்புபற்றி கல்யாண்சிங்
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக பாஜக தலைவர்களை நம்பி ஏமாந்தேன் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் கூறினார். லக்னோவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:
"பாபர் மசூதிக்கு ஒன்றும் ஆகாது என என்னிடம் பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். அயோத்தியில் அடையாள கரசேவை மட்டுமே செய்யப்படும் என உச்ச நீதி மன்றத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் இருவர் எழுத் துப்பூர்வமாகத் தெரிவித்தனர். அவர்களது வாக்குறுதியை நம்பியே மசூதி பாதுகாக்கப்படும் என நானும் உச்சநீதி மன்றத்தில் வாக்குறுதி அளித்தேன். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் என்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்க பாஜக தலைவர்கள் இந்த விஷயத்தில் சதி செய்தனர் என்றே தோன்றுகிறது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நான் குற்றவாளி என ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
கடந்த காலத்தை வைத்தே அவர் பேசுகிறார். தற்போதைய நிலை குறித்து அவர் பேச வேண்டும். முஸ்லீம்கள் என்னை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுதான் உண்மை" என்றார் கல்யாண்சிங். ('தினமணி' 3.05.2009)
No comments:
Post a Comment