உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
தருமபுரி, அக். 17- தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரி யில் நேற்று (16.10.2020) செய் தியாளர்களிடம் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழ கம் கல்வித்தரத்தில் சிறப்பான நிலையில் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் ஏற்கெனவே சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நிலையில் அண்ணா பல் கலைக்கழகத்துக்கு உயர் சிறப்புத் தகுதி கோரி துணை வேந்தர் சூரப்பா விண்ணப் பித்தது குறித்து அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இந்த உயர் சிறப்புத் தகுதியை பெற்றால் தமிழக அரசு ஏற் கெனவே நடைமுறைப்படுத்தி வரும் 69 சதவீத இடஒதுக்கீடு முறை கேள்விக்குறியாகி விடும்.
மாணவர்கள் சேர்க்கைக் காக நுழைவுத்தேர்வு நடக்கும் சூழல் உருவாகும். மாணவர் களிடம் கல்விக் கட்டணத்தை கூடுதலாக வசூலிக்கும் நிலை ஏற்படும். மாணவர்களின் கல்வி உரிமையை பாதிக்கின்ற அம்சங்கள் அதில் உள்ளதால் அண்ணா பல்கலைக்கழகத் துக்கு மத்திய அரசின் உயர் சிறப்புத் தகுதி தேவையில்லை.
தற்போது உள்ள நடை முறையே தொடரும். பல் கலைக்கழகத்துக்கு தேவை யான நிதியை தமிழக அரசே வழங்கும். மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது தொடர் பாக துணைவேந்தர் சூரப்பா அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அவர் மீதான நடவடிக்கை குறித்து தமிழக அரசு முடிவு செய்யும். மாணவர்களின் நலனைக் காப்பதே தமிழக அரசின் நோக்கம். தமிழக மாணவர் களின் கல்வி உரிமை, 69 சத வீத இட ஒதுக்கீட்டு உரிமை எந்த வகையிலும் விட்டுத் தரப்படாது.
மத்திய அரசு தனது புதிய கல்விக்கொள்கையில் வருகிற 2035ஆம் ஆண்டுக்குள் இந் தியாவில் உயர்கல்வி கற்போ ரின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது உயர் கல்வி கற்போரின் எண் ணிக்கை 49.6 சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டே கிட்டத்தட்ட 50 சதவீதம் என்ற நிலையை அடைந்து விட்டோம். இதன் மூலம் புதிய கல்விக்கொள்கையில் மத்திய அரசு அறிவித்துள்ள இலக்கை 15 ஆண்டுகள் முன் கூட்டியே தமிழகம் தற்போது எட்டிவிட்டது.
தமிழக அரசு உயர்கல்வித் துறையில் வெளிப்படை தன் மையோடு செயல்பட்டு வரு கிறது. துணைவேந்தர் பணி என்பது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும். ஆனால் தமிழக அரசு அண்ணா பல் கலைக்கழகத்தின் மேம் பாட்டு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழ கத்தில் 4 மண்டல மய்யங்கள், 13 உறுப்புக்கல்லூரிகள், 461 இணைப்பு கல்லூரிகள் உள் ளன. இவை அனைத்துக்கு மான கல்வித்தர மேம்பாட்டு பணியில் தமிழக அரசு ஈடு பட்டு வருகிறது. பிளஸ்-2 உட னடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் வருகிற 31ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து சேர்ந்து பயன் பெறலாம்.
இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன் பழகன் கூறினார்.
No comments:
Post a Comment