காற்று மாசுபாட்டால் இந்தியாவில் கடந்த ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பலி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

காற்று மாசுபாட்டால் இந்தியாவில் கடந்த ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பலி!


சென்னை, அக். 22- இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசுபாட் டால் பலியாகியுள்ளதாக பன்னாட்டளவில் அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரி விக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் (State of Global Air) வெளியிட்ட அறிக்கையில், “2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிக மான குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மட் டும் சுமார் 1,16,000 குழந்தை கள் காற்று மாசுபாடு கார ணமாகப் பலியாகி உள்ளனர்.


காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் எடை குறைந்த குழந்தை களாக உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 60 லட் சத்துக்கும் அதிகமானவர்கள் காற்று மாசுபாடு காரணமா கப் மரணமடைந்து உள்ள னர். உயர் ரத்த அழுத்தம், புகையிலைப் பயன்பாட்டுக்கு அடுத்து அதிக அளவிலான பலி காற்று மாசுபாட்டால் ஏற்படுவதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


இந்தியாவைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா, தெற்காசியா போன்ற நாடுகளிலும் காற்று மாசு காரணமாக குழந்தைகள் பலி எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்றும் அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment