சோனியா காந்தி நம்பிக்கை
புதுடில்லி, அக்.3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட் டத்தில் விவசாயிகள் வெற்றி பெறு வார்கள் என்று சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று தனது வீடியோ உரையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்த கரோனா காலத்திலும் விவசாயிகள், நாட்டுக்கு அசாதா ரண சேவை செய்தனர். அவர் களால்தான் ஏழைகளுக்கு இலவச மாக உணவு தானியம் வழங்க முடிகிறது. அத்தகைய விவசாயி களுக்கு அநீதி இழைக்கும் வகை யில், 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
காந்தியடிகள் மற்றும் ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ முழக்கத்தை அளித்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை நாம் கொண்டாடி கொண்டு இருக்கும்போது, விவசாயிகளும், தொழிலாளர்களும் மத்திய அரசின் 3 கருப்பு சட்டங் களுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.
அவர்களை மோடி அரசு அழ வைத்துக் கொண்டிருக்கிறது. விவ சாயிகளுக்கான அந்த சட்டங்களை விவசாயிகளிடம் கலந்தாலோசிக் காமல், மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
தன்னுடைய சில நண்பர்களிடம் மட்டும் ஆலோசித்து விட்டு கொண்டு வந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மக்கள் ஒப்புதலுடன்தான் ஒவ் வொரு சட்டமும் கொண்டு வரப் பட்டது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் தொடர்ந்து போராடும். இந்த போராட்டத்தில் விவசாயிகள் வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment