அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையன் கண்டனம்
சென்னை,அக்.16மத்திய அரசின் ஹிந்தித் திணிப் புக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி அவர் களின் தாயார் மறைவுக்கு மத்தியஉள்துறைஅமைச் சர் அமித்ஷா ஹிந்தி யில்இரங்கல்கடிதம்எழு தியுள்ளார். முதலமைச்சருக் குப் புரியும் மொழியில் எழுதாமல், ஹிந்தியில் எழுதியதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,அ.தி. மு.க.முன்னாள் அமைச்ச ரும்,அமைப்புச்செயலாள ரும்,செய்தித்தொடர்பாள ருமான பொன்னையன்கண் டனம் தெரிவித்துள்ளார்.
‘‘அமித்ஷாவின்தாய் மொழி ஹிந்தி இல்லை. ஆனாலும், அவர் ஹிந்தி யில் கடிதம் எழுதுகிறார் என்றால் அப்படிப்பட்ட வெறிச்செயலில் தற் போதுள்ளமத்திய அரசு ஹிந்தி மொழித் திணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறதுஎன்ப தற்கு அதுவே எடுத்துக் காட்டு'' என்று கோபமாகக் கூறினார்.
No comments:
Post a Comment