நன்கொடை அளிப்பு
ஈரோடு, அக். 30- ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் பெ.மேட்டுப்பாளையம்,- பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பாளர் பொன்முகிலன் - பொதுக்குழு உறுப்பினர் செல்வி ஆகி யோரின் 'அய்யா -அன்பு புது இல்லம் திறப்பு விழா' 28.10.2020 அன்று பெ. மேட் டுப்பாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அய்யா -அன்பு இல்லத்தை சீரங்காயம்மாள் அய்யாசாமி திறந்து வைத்தார். புது இல் லத்தில் வி.ஆர்.சாமி நினைவு நூலகம் அமைக்கப்பட்டிருந் தது. கடலூர் மண்டல கழக செயலாளர் நா.தாமோதரன் திறந்து வைத்தார். மற்றொரு பகுதியில் அமைக்கப்பட்ட பெரியார் படிப்பகத்தை பேராசிரியர் முனைவர் ப. காளிமுத்து திறந்து வைத்தார்.அதன் மகிழ்வாக " விடுதலை" ஆண்டுச் சந்தா ஒன்றும், விடு தலை " வளர்ச்சி நன்கொடை ரூ 1000 கழக அமைப்புச் செய லாளர் ஈரோடு த.சண்முகம் அவர்களிடமும், கோபி மாவட்ட தலைவர் இரா.சீனிவாசன் அவர்களிடமும் வழங்கினார்கள்.
நிகழ்வில் ஈரோடு மண்டல தலைவர் ப.பிரகலாதன், பொதுக்குழு உறுப்பினர் கள் கோ.பாலகிருட்டிணன், வழக் குரைஞர் மு.சென்னியப்பன், ஈரோடு மாவட்ட தலைவர் கு.சிற்றரசு, செயலாளர்கள் கோபி நா.சிவலிங்கம், ஈரோடு மா.மணிமாறன், அ.பாட்டுச் சாமி, அசிரியர் குப்புசாமி, வழக்குரைஞர் கோபி, கந்த சாமி, ரத்தினசாமி, இராம.இளங்கோவன், வேணுகோ பால், தங்க மலர், அறிவு, மதி வதனி உட்பட ஏராளமான கழகத் தோழர்களும், உறவி னர்களும் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment