கொடைக்கானலில் கல்திட்டைகள் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 7, 2020

கொடைக்கானலில் கல்திட்டைகள் கண்டுபிடிப்பு

திண்டுக்கல், அக். 7- கொடைக்கானல் மலை யில் ஆதி மனிதன் வாழ்ந்த பகுதிகளை சுற்றுலாத் தலங்களாக அறிவிக்க வேண் டுமென்ற கோரிக்கைஎழுந்துள்ளது.


மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்கும் இங்கு நூற்றுக் கணக்கான தொல்லியல் ஆய்வுமேற் கொள்ள வேண்டிய இடங்கள் மத்திய - மாநில அரசுகளால் கிடப்பில் போடப் பட்டுள்ளன. 1958-ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. கிட்டத்தட்ட60 ஆண்டுகளாக மூதாதையர் களின் வரலாறுகள் வெளி உலகுக்கு தெரியாமல் அடர் வனங்க ளுக்குள்ளே மறைக்கப்பட்டு விட்டன.


பள்ளங்கி அருகேயுள்ள கொட்டி வரை அருவி, ரிவர்ஸ் வாக், பேத்துப் பாறையில் உள்ள ஆதி மனிதனின் கல் திட்டை, அய்ந்து வீடு அருவி, ஓராவி அருவி, போளுர் கிராமத்தில் உள்ள புல வச்சி ஆற்று நீர்வீழ்ச்சி, பூம்பாறை, மன்ன வனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நீர் வீழ்ச்சிகளை சுற்றுலாத் தலங் களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ள நிலையில் சமீபத்தில் கோட்டாட் சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.


புதிய சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டிய முக்கிய இடம் பேத்துப்பாறையிலுள்ள டால்மென்கள் எனப்படும் கல் திட்டைகள். மூவாயிரம்  ஆண்டு பழை மையானவை.  இரும்புக் காலத்திற்கு முந்தையவை. வெண்கலக் காலத்தின் பிற்பகுதி கி.மு.1400ஆம் ஆண்டு எனக் கூறப்படுகிறது. தமிழகத்தின் வரலாற்றை சற்றேறக்குறைய  சங்ககாலம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார் கள். தமிழகத்தின் ஆதிகுடிகள் இந்த மலைப்பகுதியில் வாழ்ந்து மறைந்தவர் களின் நினைவாக எழுப்பப்பட்ட கல் திட்டைகள்தான் சாட்சிகளாக உள் ளன. இந்தக் கல்திட்டைகள் குள்ள மனிதர்களின் வீடுகள் என்று தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.  அவை நமது மூதாதையர்களின் கல்லறைகள். தாண்டிக்குடி, பாச்சலூர், பெருமாள் மலை உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில்  தொல்லியல் துறைஆய்வு செய்த நூற்றுக் கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளன. தாண்டிக்குடியில் இரும்பு காலத்திற்கு முந்தைய கல்திட்டைகள் உள்ளன. ஆதித் தமிழனின் உறைவிடமாக இந்தப் பகுதி  உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 6,200அடி உயரத்தில் உள்ளது கூக்கால் கிராமம். வனத்துறைக்கு கட்டுப்பட்ட இங்குள்ள மலையில் உள்ள குகையில் 1980ஆம் ஆண்டு வரை 30 பளியர் குடும் பங்கள் வசித்துள்ளன. இவர்கள் ஆதி வாசிகளைப் போலவே இலைகளால் ஆடைஉடுத்தியிருந்ததாகக் கூறப்படு கிறது. இந்தக் குகையில் பழங்கால ஓவி யங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இடத்தை யும்  சுற்றுலாத்தலமாக  அறிவிக்க வேண்டும். 


இது தொடர்பாக தொல்லியல் ஆய் வாளர் நாராயணமூர்த்தி கூறும் போது, தாண்டிக்குடி, பெருமாள்மலை, பாச்ச லூர்  பகுதிகளில்  நமக்கு கிடைத்த மெகாலித்திக் கல்திட்டைகள் இரும்புக் காலத்திற்கு முந்தையவை. இதுபோன்று இந்த மலைப்பகுதியில் ஏராளமான கல் திட்டைகள் உள்ளன. அரசு சுற்றுலாத் துறை உள்ளூரில் படித்து வேலையின்றி உள்ள இளைஞர்களை வழிகாட்டி களாக பயன்படுத்த வேண்டும்.  மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்திட்டைகளை பார்ப்பதற்கு சாலைவசதி செய்துதர வேண்டும். முறை யாக பராமரிக்கவேண்டும். அப்படிச் செய்தால் அந்தக் கிராமங்கள் முன் னேற்றமடையும், மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கும். கிராமப் பொரு ளாதாரம் மேம்படும். திண்டுக்கல் ஆட் சியர் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரி கள், வனத்துறை அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென்றார்.


No comments:

Post a Comment