காமம் என்பது முகம் சுழிக்கும் சொல்லா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 3, 2020

காமம் என்பது முகம் சுழிக்கும் சொல்லா

காமம் என்பது முகம் சுழிக்கும் சொல்லா?



 காரமா என்பது பாலிமொழியில் இருந்து வந்த சொல் ஆகும், இதை பவுத்த இலக்கி யங்களிலும் சமணத் தமிழ் நூல்கள் போன் றவற்றில்  பயன்படுத்தியுள்ளார், அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பின்னர் பார சீகத்திலிருந்து வந்த வடமொழி பரந்துபட்ட இந்திய தீபகற்பத்தில் வடக்கே தமிழை ஒற் றிய கடி போலி(சொல்ல கடினமான மொழி) என்று அவாளால் பெயர்வைக்கப்பட்டது. என்ற மொழியோடு கலந்தது, பாரசீக மொழியில் 'ர' என்றச் சொல் எப்போதுமே மென்மையாக ஒலிக்கும், இன்றும் உருது மற்றும் சமஸ்கிருதம் ஈரானிய மொழிகளில் *ர* என்ற சொல் மறைந்து ஒலிக்கும், அரபி யிலும் அப்படியே! இதனால்  'காராமா' என்ற சொல்லின் 'ரா' மறைந்து பின்னாளில் காமா என்று மாறிவிட்டது,  தமிழில் காமம் என்று ஒலிக்கிறது.


  சரி இந்த காமா என்றால் என்ன காமா என்பது அறிவுப் பெருக்கம், பேரறிவாளர் களைக் குறிக்கும் சொல் ஆகையால் தான் புத்தனை காமராஜன் என்றும் அழைத்தனர்.


 அறிவு மார்க்கங்களாக சமண பவுத்த மார்க்கத்தில் நடந்துகொண்டிருந்த மக்க ளின்  அறிவை அழித்து மூடநம்பிக்கை புகுத்துவதற்கு அவர்களை மூளையை மழுங்குவதற்கு பாலியல் நூல்கள் இயற்றப் பட்டது, அதற்கு பெயரே காமசூத்திரம் என்று பெயர்வைக்கப் பட்டு அந்த வார்த் தையே ஆபாசமாக்கினர், அதன் பிறகு புராண கதைகளில் காமத்திற்கு என்று ஒரு கடவுள் உருவாக்கப்பட்டு காம தேவன் என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டது,  இங்கு தான் அழகிய பெண்கள் என்றால் வெள் ளையாக இருக்கவேண்டும், அதிக ஒப் பனை செய்திருக்கவேண்டும் தங்க நகை கள் அணிந்திருக்கவேண்டும் என்று கூறி அதற்காக ரதி ரம்பை ஊர்வசி போன்ற பாத்திரங்களைப் படைத்தனர்.  எளிமையான, நிம்மதியான, பேராசையற்று, அமைதியாக வாழ்ந்த சமூகத்தை காமம் என்ற ஒற் றைச் சொல்லை திரித்து அதை ஆபாசச் சொல்லாக்கி பெண் களை போகப்பொரு ளாக்கி அடிமைகளாக மாற்றிவிட்டனர். 


காஞ்சியில் காமாட்சி என்று அழைக்கப் படும் தெய்வம் பவுத்த இலக்கியமான மணிமே கலை பாத்திரத்தில் வரும் நாயகி மணிமேகலை ஆகும். மணிமேகலை என்ற இலக்கிய நாய கியை தமிழ் நூல்கள் மணிமேகலா தெய்வம் என்று குறிப்பிடு கின்றன. இந்த மனிமேகலா தெய்வத்தின் மற்றோரு பெயர் காமாட்சி அதா வது அறிவை ஆள்பவம். இந்த மணிமேகலை ஒரு பவுத்த துறவியாக வாழ்ந்தார்.  அவர் கடல்கடந்து பவுத்த மார்க்கத்தை பரப்புவ தற்குச் சென்றார்.  அவர்  சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு அந்த அந்த நாட்டு வழக் கபடி பெயர் சூட்டி இன்றும் வழிபட்டு வரு கின்றனர். முக்கியமாக கவனிக்க வேண்டியது அவர் (மணிமேகலா தெய்வம்) கடல்மற்றும் கடல் சார்ந்த நெய்தல் மக்க ளால் பெரிதும் கொண்டாடப்படுகிறார், தாரா, அவலொகிச் வரா, இன்ன பிற பெயர்களின் அழைக்கின்றனர்.   இவரை இந்தியா வரும் பவுத்தம் மற்றும் தாவோ பவுத்தம் ஜென் பவுத்த துறவிகள் மதர் ஆப் மெர்சி (அன்பின் கடவுள்) என்று அழைக் கின்றனர். காரணம் இந்தியச் சொற்களில் அவர்கள் கூறும் போது அந்து இங்கே ஏற்கனவே வழிபடும் இந்து கடவுளாக மாறிவிடும். ஆகவே அவர்கள் மதர் ஆப் மெர்சி என்று குறிப்பிடுகின்றனர்.


இன்றைய பிஜி தீவுகள் மற்றும் பாலி னேசியா தீவுகள் எனப்படும் பிலிபைன்ஸ் போன்ற தீவுகளுக்கு 2100 ஆண்டுகளுக்கு முன்பே சென்று பவுத்ததை பரப்பியுள்ளார். அக்காலத்தில் தமிழ் பெண்கள் கலங்கி மிரட்டும் பேராழிக்கு (கொந்தளிப்பான கடல்) அஞ்சாமல் கப்பலில் சென்றுள்ளனர் என்பது நமது தமிழ் பெண்களின் துணிச் சலுக்கு எடுத்துக்காட்டு ஆகும். இன்றும் பிஜி மற்றும் பிலிபைன்ஸ் நாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல் இணையும் பகுதி மோசமான காலநிலைகொண்ட கடல் பகுதி ஆகும்.  பெருமை வாய்ந்த சொல்லை ஆபாசச் சொல்லாக்கி துணிச்சலும் தன்னிறைவு பெற்ற திராவிடப் பெண்களை வெறும் போகப்பொரு ளாக மாற்றியதில் சனாதனத் தின் பங்கும் ஒரு சொல்லை வைத்து ஒரு சமூகத்தையே மாற்றுவதற்கான நரித்தந்தி ரத்தை கைபர் போலன் கனவாய் வழியாக வந்த ஆரியர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து செயலாக்கியுள்ளனர்.


No comments:

Post a Comment