டெக்கான் கிரானிகல், ஹைதராபாத்:
- உ.பி. ஹத்ராஸ் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் மரணத்தை அடுத்து தற்போது அதே உ.பியில், சித்ரகூட் மாவட்டத்தில் மேலும் ஒரு தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி யுள்ளார். காவல்துறை அந்த பெண்ணின் புகாரை வாங்க மறுத்ததால் தூக்கி லிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டெக்கான் கிரானிகல், சென்னை:
- வேளாண் சட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தைக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் அழைப்பினை ஏற்று சில விவசாய சங்கங்கள் சென்றனர். அமைச்சர் கூட்டத்திற்கு வராததைக் கண்டித்து கிசான் பவன் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தி, வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
- ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு சொத்துவரியாக ரூ.6 லட்சத்தை விதித்ததை எதிர்த்து வழக்கைத் தொடுத்ததற்காக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் அபராதம் விதிப்ப தாக தெரிவித்ததையடுத்து, ரஜினிகாந்த் தனது வழக்கை திரும்பப் பெற்றார்.
- மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர் களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளது. அவசர சட்டம் செப். 15இல் நிறை வேற்றப்பட்டு அன்றே ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாதம் ஆகியும் முடிவெடுக்கப்படவில்லை. மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு விரைவில் முடிவெடுக்க வேண்டும். 2 நாளில் நீட் தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் அவசர சட்டத்துக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படாதது அரசுப் பள்ளி மாணவர்களை பாதிக்காதா? ஆளுநரின் செயலரிடம் உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தர விட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- மகாராஷ்டிரா மாநில ஆளுநரின் மதச்சார்பின்மை குறித்த கருத்துக்களுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சி.பி.எம். வலியுறுத்தியுள்ளது.
- பஞ்சாப் மாநில அரசு மற்றும் கார்ப்பரேசன் பணி நியமனங் களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- தனிஷ்க் நகைக்கடை விளம்பரம் மதத்தைப் புண்படுத்துவதாக ஹிந்து அமைப்பினர் கூறுவது யதார்த்திற்கு எதிரானது. மதத்தைக் கடந்து மக்கள் இருக்கிறார்கள்; வாழ்கிறார்கள் என ஜிண்டால் குளோபல் கல்லூரி பேராசிரியர் சமீனா தல்வாய் குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களவையும், மாநிலங் களவையும் விவாதங்கள் நடக்கும் முக்கிய இடங்களில் இருந்து விலகிவிட்டன என பேராசிரியர்கள் கிறிஸ்டபி ஜாப்ரலட், விகாங் ஜும்லே தங்களது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- ஜி.எஸ்.டி. இழப்பு நிதி மத்திய அரசிடம் இருந்து பெறமுடியாததை அடுத்து, ரூ.9000 கோடி வெளி சந்தையில் கடன் பெற தமிழ் நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
- இந்திய அரசில் நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளில் உள்ள குறைகளை சரி செய்யவில்லை என்றால் நாடு இன்னமும் மோசமாகி விடும் என இப்பத்திரிக்கையின் ஆசிரியர் ஜி.எஸ்.வாசு குறிப்பிட்டுள்ளார்.
தி டெலிகிராப்:
- 1965இல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போது, ‘முஸ்லீம் ரெஜிமெண்ட்’ பாகிஸ்தானுக்கு எதிராக போர் செய்ய முடியாது என்று கூறியதாக வரும் செய்தி முழுக்க தவறானது. ‘முஸ்லீம் ரெஜிமெண்ட்’ என்ற அமைப்பே ராணுவத்தில் இல்லை. இத்தகைய பொய்யைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணுவத்தில் பணியாற்றிய 120 முன்னாள் ராணுவத்தினர் குடியரசுத்தலைவரை வலியுறுத்தியுள்ளனர்.
- தனி நபர் வருவாயில், வங்கதேசம் இந்தியாவை மிஞ்ச இருக்கிறது. இது பாஜகவின் ஆறு ஆண்டு கால வெறுப்பு நிறைந்த கலாச்சார தேசியவாதத்தின் சாதனையாகும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
- குடந்தை கருணா
15.10.2020
No comments:
Post a Comment