பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவருக்கு நீட் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண்: மதிப்பீட்டில் முறைகேடு என குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவருக்கு நீட் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண்: மதிப்பீட்டில் முறைகேடு என குற்றச்சாட்டு

சென்னை, அக். 22- பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பள்ளியில் முதலிடம் பெற்ற சென்னை மாணவருக்கு நீட் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண் வழங்கப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடைத் தாள் மதிப்பீட்டில் பெரிய அளவில் முறைகேடு நடந்தி ருப்பதாக அவரது குடும்பத் தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


‘நீட்' தேர்வு முடிவுகள் கடந்த 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஒடிசா மாணவர் சோயப் அப்தாப், டில்லி மாணவி அகான்ஷா ஆகியோர் 720-க்கு 720 மதிப் பெண் எடுத்து தேசிய அள வில் முதலிடம் பிடித்தனர். திருப்பூர் மாணவர் ஜூன் 710 எடுத்து தமிழக அளவில் முதலிடம் பெற்றார். தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வார்பட்டியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார் 644 மதிப்பெண் பெற்று தேசியஅளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்தார்.


இதற்கிடையில், திரிபுரா, உத்தராகண்ட் மாநிலங்களில் தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை யில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால், தேர்வு முடிவுகள் வெளியான 2 மணி நேரத்தில் அதை நீக்கிவிட்டு, திருத்தப் பட்ட புதிய தேர்வு முடிவு களை தேசிய தேர்வுமுகமை வெளியிட்டது. இத்தேர்வு முடிவுகள் தமிழக மாண வர்கள் மத்தியிலும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. தனது தேர்வு முடிவில் பெரிய குளறுபடிநடந்திருப்பதாக அரியலூர் மாணவி மகா ராணி குற்றம்சாட்டினார். 3 கேள்விகள் மட்டுமே விடை அளிக்காமல் விட்ட தனக்கு 680 மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலை யில், 37 மதிப்பெண் மட்டுமே கிடைத்திருப்பதாக கூறினார். இதுபோல பல மாணவர்கள் தங்கள் விடைத்தாள் மதிப் பீட்டில் குளறுபடிகள் இருப் பதாக தேசிய தேர்வு முக மைக்கு மின்னஞ்சல் வாயி லாக புகார் அனுப்பியுள்ளனர்.


இந்த நிலையில், சென்னை மாணவர் சாய் அக்‌ஷய் தனக்கு பூஜ்ஜிய மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்து உள்ளார். இவர் 10ஆ-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 475 மதிப்பெண்ணும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600-க்கு 516 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பெற்றவர்.


அவர் கூறும்போது, ‘‘நீட் தேர்வு முடிந்து ‘கீ ஆன்சர்’ வெளியிடப்பட்டதும் என் விடைகளை ஆய்வு செய் தேன். அதன்படி எனக்கு 520 மதிப்பெண் வந்ததால், கண் டிப்பாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். தேர்வு முடிவில் பூஜ்ஜிய மதிப் பெண் வந்திருப்பது அதிர்ச்சி யாக உள்ளது’’ என்றார்.


அவரது குடும்பத்தினர் கூறியபோது, ‘‘தேசிய தேர்வு முகமையிடம் விண்ணப் பித்து, சாய் அக்‌ஷய் விடைத் தாளை (ஓஎம்ஆர் ஷீட்) பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தோம். அதில்,எந்த கேள்விக்கும் விடையளிக்கப் படாமல் இருந்தது. அதில் இருந்தகையெழுத்தும் முற்றி லும் வித்தியாசமாக இருந்தது. முறைகேடு நடந்திருப்பது தெளிவாக தெரிகிறது. இது குறித்து தேர்வுமுகமையிடம் புகார் செய்துள்ளோம். சரி யான பதில் வராவிட்டால் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.


No comments:

Post a Comment