ராகுல் காந்தியை பிடித்து தள்ளி மரியாதை குறைவாக நடத்துவதா?
மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
அகில இந்தியக் கட்சித் தலைவர் ஒருவரை, நாடாளு மன்ற உறுப்பினரை, செயல்பட விடாமல் தடுத்தது மட்டுமல்ல, அவரைப் பிடித்துத் தள்ளுவது, மரியாதைக் குறைவானது, மனிதநேயமற்றது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: உ.பி.யில் பாலியல் கொடுமையால் பலியான பெண் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தியை ஓர் அகில இந்தியத் தலைவர் என்றும் பாராமல், பிடித்துத் தள்ளி மரியாதைக் குறைவாக நடத்துவது மனித உரிமைகளுக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது இதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சாமியார் ஆதித்யநாத் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது
மாயாவதி குற்றச்சாட்டு
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில்: மாநி லத்தில் பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சட் டம், ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. எனவே, மத்திய அரசு யோகி ஆதித்யநாத்துக்கு பதிலாக, தகுதி வாய்ந்த ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும். இல்லை யெனில், ஆட்சியை கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். ஒரு தாயின் கருவில் இருந்து பிறந்த நீங்கள், மற்றவர்களின் சகோதரி, மகள்களை உங்களின் சகோதரி, மகளாக கருத வேண்டும். அவர்களை பாதுகாக்க முடியவில்லை என்றால் பதவியை விட்டு விலகி விடுங்கள்,’’ என்றார்.
பெண்களின் பாதுகாப்புக்காக காங்கிரஸ் போராட்டம் தொடரும்
பிரியங்கா காந்தி பேட்டி
கடுமையான வெயில் அடித்த நிலையில், துப்பட் டாவை தலையில் போட்டுக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் பிரியங்கா காந்தி விறுவிறுவென நடந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த பத்திரிகையா ளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘ உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கான உதாரணம்தான் இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பு. இம்மாநிலத்தில் தினமும் 11 பாலியல் வழக்குகள் பதிவாகின்றன. முதல்வர் யோகியின் அரசு, பெண்களின் பாதுகாப்புக்காக எதை யுமே செய்வதில்லை.
கடந்தாண்டு இதே நேரத்தில் உன்னாவ் பெண் பாலியல் வழக்கில் நீதி கேட்டு போராடினோம். இப்போது, ஹத்ராஸ் சம்பவத்துக்காக போராடுகிறோம். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் வரை காங்கிரஸ் தனது போராட்டத்தைத் தொடரும். இந்து மக்களின் பாதுகாவலர்கள் என்று பாஜ அரசு கூறுகிறது. ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் இல்லாமல் இறுதிக் காரியத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இந்து மதம் கூறியிருக்கிறதா? இரவோடு இரவாக, இளம்பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் எரித்தது மிகப்பெரிய அநீதி,’’ என்றார்.
No comments:
Post a Comment