புதுடில்லி,அக்.14, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங் களை சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங் களவை யின் 11 உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் நவம்பர் 25ஆம் தேதியுடன் முடி வடைகின்றன. இவற்றில் உத்தரப் பிர தேசத்தில் 10 இடங்களும், உத்தர காண்டில் ஓரிடமும் காலியாகும்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் கான இடங்கள் காலியாகும் சூழலில் அவற்றை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பினை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், 11 நாடாளுமன்ற மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதன்படி, தேர்தல் வருகிற நவம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. அதே நாளில் வாக்கு பதிவும் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment