சென்னை, அக். 2- இந்தியாவின் முன்னணி ஆரோக்கிய பிராண்டு களில் ஒன்றான இமாலயா மருத்துவ நிறுவனம், அவர்களின் பிரத்தியேக மதர்கேர் பிரிவான இமாலயா ஃபார் மாம்ஸ்-அய் விரிவுபடுத்துகிறது. தாய்மார்களுக்கான கர்ப்ப காலத்திலும், கர்ப்பத் திற்குப் பிறகும் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க் தோற்றத்தைக் குறைக்க உதவும் வகையில், ஸ்ட்ரெட்ச் மார்க் ஆயில் மற்றும் கிரீம் என்ற அதன் வகையில் முதலாவதான இரண்டு - ஸ்டெப் தோல் பரா மரிப்பு வழக்கத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது "உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வதற்கான ஒரு வழக்கத்தை பின்பற்றுவது ஸ்ட்ரெட்ச் மார்க் தோற்றத்தை குறைக்க உதவுகிறது. மேம்பட்ட மூலிகை எண்ணெய் மற்றும் மூலிகை-எண்ணெய்-வெண்ணெய் ஆகியவற்றுடன் எண்ணெய் மற்றும் கிரீம் கலவையானது, பாதுகாப்பான பொருட்களுடன் சேர்ந்து, கர்ப்ப காலத்தில் மற்றும் பிந்தைய காலங்களில் இயற்கையாகவே ஸ்ட்ரெட்ச் மார்க்கை குறைக்க உதவுகிறது என இந்நிறுவனத்தின் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் பிரதீபா பாப்ஷெட் கூறினார்.
இந்தியாவில் சாலை பாதுகாப்பு
அளவீட்டுகளை மேம்படுத்தும் ஆய்வு
சென்னை, அக். 2- சாலை பாதுகாப்பை கட்டமைக்கும் நிறுவன மான தி இன்டர்நேஷனல் ரோட் அசெஸ்மென்ட் புரொக்ரா, என்பது ஒரு ரெஜிஸ்டர் செய்த அறக்கட்டளை ஆகும். இது பாதுகாப்பான சாலைக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலமாக, சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கும் பணியில் ஈடு பட்டுள்ளது, தற்போது பெடக்ஸ் எக்ஸ்பிரஸ் உடன் கரம்கோர்த்துள் ளது, எக்ஸ்பிரஸ், உலகின் மிகப்பெரிய டிரான்ஸ்போர்ட் எக்ஸ் பிரஸ் கம்பெனி மற்றும் கார்ப்-ன் துணை நிறுவனமாகும்.இது 5-ஸ்டார் குளோபல் கனெக்சன்ஸ் இனிஷியேட்டிவ் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இந்த புரொக்ராம், உலகம் முழுக்க 100க்கும் அதிகமான நாடுகளில் அவர்களுக்கென பிரத்யேகமான ஆர்ஏபி புரொக்ராம் மற்றும் செயல்திட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதே போன்ற மிகப்பெரிய ஒப்பந்தப் பணியை இந்தியாவிலும் ஏற்படுத்த உள்ளது. இதன் மூலம் அனைத்து பயனாளர்களுக்கும் தரமான சாலைகள் கிடைக்க வழிசெய்வதில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றதாகும் என்று அய்ஆர்ஏபி குளோபல் புரொக்ராம் மேலாளர் ஜூடி வில்லியம்ஸ் கூறுகிறார்.
No comments:
Post a Comment