முதலைமைச்சர் பதவியில்  எடியூரப்பா நீடிக்க மாட்டாராம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

முதலைமைச்சர் பதவியில்  எடியூரப்பா நீடிக்க மாட்டாராம்!

பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் பேட்டி


விஜயாப்புரா, அக்.21 கருநாடக முதல மைச்சர் பதவியில் எடியூரப்பா நீடிக்க மாட்டார் என்று கருநாடக பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப் பினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தசட்டமன்றஉறுப்பினர்பசன கவுடாபட்டீல்யத்னால்முஸ்லிம் கள் குறித்து அடிக்கடி சர்ச்சைக் குரிய கருத்துகளை கூறிபரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அவர் தற் போது முதலமைச்சர் எடியூரப்பா வுக்குஎதிராககருத்துகளை தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் விஜ யாப்புராவில் நேற்று (அக்.20) செய் தியாளர்களுக்கு பேட்டி அளிக்கை யில் கூறியதாவது:-


முதலமைச்சர் பதவியில்எடி யூரப்பாநீண்டநாள்நீடிக்கமாட் டார்.எங்கள்கட்சிமேலிட தலைவர்களுக்கும் அவர்போதும் என்றாகிவிட்டது. வட கருநாட கத்தைச் சேர்ந்த ஒருவர் தான் மாநிலத்தின் அடுத்த முதலமைச் சராக பதவி ஏற்பார். பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் வட கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள். இதை பாரதீய ஜனதா மேலிட தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் மற்ற பகுதிகளில் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று, அதில் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார்.


அதனால்அடுத்தமுறை வடகருநாடகத்தைச்சேர்ந்தஒரு வர் தான் முதலமைச்சர் ஆவார். பிரதமர்மோடியும், வடகருநாட கத்தைச் சேர்ந்தவருக்கு முதல மைச்சர் ஆகும் வாய்ப்பை வழங்கு வதாக உறுதியளித்துள்ளார். எடி யூரப்பாவுக்கும், எனக்கும் தகராறு தொடங்கியுள்ளது. எனது தொகு திக்கு ஒதுக்கப்பட்ட ரூ.125 கோடி நிதியை முதலமைச்சர் எடியூரப்பா ரத்து செய்துள்ளார்.


இதுதொடர்பாக அவருக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர் திட்டங்களை சிவமொக்கா வுக்கு எடுத்துச் செல்கிறார். இனி எடியூரப்பா முதலமைச்சர் பதவியில் நீடிக்க மாட்டார். அதற்கான நேரம் தற்போது வந்துள்ளது. அந்த ரூ.125 கோடியை கொண்டு விஜ யாப்புராவில் சிமெண்டு சாலை அமைக்க திட்டமிட்டிருந்தேன். அந்த நிதியை மீண்டும் பெறாமல் விடமாட்டேன். நாங்கள் தற்போது மாநிலத்தின் தென்பகுதிக்குச் சென்று அவர்களின் வீட்டு முன்பு நிற்கிறோம். அதே போல் தென் பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் வீட்டு முன் வந்து நிற்பார்கள்.


இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் கூறினார்.


No comments:

Post a Comment