கொல்கத்தா, அக்.24 மேற்கு வங்கத்தில், கூர்க்காலாந்து தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் கூர்க்காஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சி, பாஜக கூட் டணியில் இருந்து ஓட்டம் பிடித் துள்ளது.
ஜிஜேஎம் கட்சியானது டார் ஜிலிங் மலைப் பகுதியில், ஓரளவுக்கு செல்வாக்குள்ள கட்சியாகும். கடந்த 2009-ஆம்ஆண்டு இக் கட்சியை உருவாக்கிய பிமால் குருங் என்பவர், பாஜகவுடன் கூட்டணி வைத்து, கடந்த 2011 மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில், 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றார்.
அதைத்தொடர்ந்து, கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், ஜிஜேஎம் ஆதரவுடன் டார்ஜிலிங்கை உள்ளடக்கிய வடமேற்குவங்கத்தில், மொத்தமுள்ள 8 மக்களவைத் தொகுதிகளில் 7 தொகுதிகளை பாஜக வென்றது.மேலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், மேற்கு வங்கஆட்சியை கைப்பற்றி விடு வோம் என்று கூறிவரும் பாஜக,இந்த 8 மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 56 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெற்று விடுவோம் என்று ஜிஜேஎம் கட்சியை வைத்து மனக்கோட்டை கட்டியிருந்தது. இந்நிலையில் தான், பிமால் குருங் தலைமையிலான ஜிஜேஎம் கட்சி, பாஜககூட்டணியிலிருந்து வெளியேறி, பாஜக மனக் கோட்டையை உடைத்துள்ளது.
கூர்க்காலாந்து தனி மாநிலக் கோரிக்கை விஷயத்தில் மத்திய பாஜக அரசு தங்களைஏமாற்றி விட்டதாக கூறி ஜிஜேஎம்கட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.தற்போது, ஜிஜேஎம் கட்சியை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment