பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு : கருநாடகத்தில் உள்ளது போல தமிழ்நாட்டுக்கு என்று தனிக் 'கொடி' அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு : கருநாடகத்தில் உள்ளது போல தமிழ்நாட்டுக்கு என்று தனிக் 'கொடி' அறிமுகம்


சென்னை, அக்.21 கருநாடகம் நாகலாந்து மாநிலங்களுக்குத் தனிக் கொடி இருப்பதுபோல, தமிழ்நாட்டிற்கும் தனிக் கொடி ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது.


கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பா ளர்கள் சென்னை  செய்தியாளர்கள் சங்கக் கட்டடத்தில் கூடி (20.10.2020 முற்பகல் 11.30 மணிக்கு) ஊடகவியலாளர்கள் மத்தியில் புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.


தோழர் பொதுவன் கொடியை அறி முகப்படுத்தி விளக்கிக் கூறினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வாழ்த்திப் பேசினார். தோழர்கள் திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், நாகை திருவள்ளுவன் மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தோழர்கள் பங்கேற்றனர்.


கூட்டமைப்பின் கோரிக்கை


எதிர்வரும் நவம்பர் முதல்நாள் தமிழ் நாடு விழாவைத் தமிழ்நாடெங்கும் மிகச் சிறப்பாக நடத்துவது எனப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முடிவெடுத் திருக்கிறது.


1956 நவம்பர் முதல்நாள், மொழி மாநில அரசாகத் தமிழ்நாடு அமைந்த நாளைக் கருநாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல மொழி மாநிலங்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றன.


மொழி மாநிலங்களின் உரிமைகளைப் படிப்படியாகப் பறித்துக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில், தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு விழாவைக் கொண்டாட வேண்டும் எனக் கடந்தாண்டு அறிவித்த அடிப்படையில் மிகப்பெரும் எழுச்சி விழாவாகத் தமிழ்நாடு விழா முன்னெடுத்து நடத்தப்பட இருக்கிறது. -


தமிழ்நாடு அரசுக்கெனத் தனி இலச் சினை, தமிழ் வாழ்த்துப் பாடல் இருப்பது போல் தமிழ்நாட்டிற்கு எனத் தனிக் கொடி ஒன்றும் இருந்தாகவேண்டும் என்பதைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. கருநாடக அரசும், நாக லாந்து உள்ளிட்ட பல வடமாநில அரசு களும் தங்களுக்கென ஒரு கொடியை அடையாளப்படுத்தி வைத்திருப்பது போல் தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டிற்கென ஒரு கொடியை அடையாளப்படுத்தி தமிழ்நா டெங்கும் ஏற்றிட வேண்டும் எனக் கேட் டுக் கொள்கிறோம்.


தமிழ்நாட்டிற்கென ஒரு கொடியை அனைவரின் கருத்தறிந்தும் அடையாளப் படுத்தி தமிழ்நாடு அரசு அறிவிக்கிற வரை, 150-க்கும் மேற்பட்ட உறுப்பு அமைப்பு களின் ஒருமித்த கருத்தால் ஏற்கப்பட்ட கொடியைத் தமிழ்நாட்டுக் கொடியாக அறிவிக்கவும் ஏற்கவும் செய்கிறது பெரி யாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு.


எந்தவித ஜாதி, சமய அடையாளங் களுக்கும் உட்படாத வகையில் வெள்ளை நிறக் கொடியில் தமிழ்நாடு வரைப்படம் சிவப்பு வண்ணத்தில் அமைகிறபடியாகப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தமிழ்நாட்டுக் கொடியை அடையாளப் படுத்துகிறது.


தமிழ்நாடு விழாவை முன்னிட்டுக் கட்டுரைப் போட்டிகளைக் கூட்டமைப்பு அறிவித்திருப்பதோடு. இணையவழி விழாக் கருத்தரங்குகளையும் அக்டோபர் 29, 30, 31 ஆகிய நாள்களில் நடத்துகிறது. அக் கருத்தரங்குகளில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களும், தமிழ்த் தவத்திரு அடிகளார்களாகிய சத்தியவேல் முருகனார், பேரூர் மருதாசலம் அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் ஆகியோரும், திரைத்துறையைச் சார்ந்த தமிழ்க் கலைஞர்கள் சத்தியராசு, கரு. பழனியப்பன், கோபி நயினார் ஆகியோ ரும், தமிழ் அறிஞர்களும் கூட்டமைப்பின் முன்னணித் தலைவர்களும் பங்கேற் கின்றனர்.


தமிழ்நாடெங்கும் ஒவ்வொரு மாவட் டத்திலும் குறைந்தது 10 ஊர்கள் என்கிற அளவில் 500-க்கும் மேற்பட்ட ஊர்களில் கொடியேற்றத்துடன் தமிழ்நாடு விழா தமிழர்களின் எழுச்சியோடு நடைபெற இருக்கிறது.


இந்நிலையில், தமிழ்நாடு விழாவான நவம்பர் முதல் நாளை, பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும்,


'தமிழ்நாட்டிற்கு என ஒரு கொடியை அறிஞர் பெருமக்களின் கருத்தறிந்து உருவாக்கி அடையாளப்படுத்தி அறிவித்திட வேண்டும்' என்றும் தமிழ்நாட்டு அரசைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.


No comments:

Post a Comment