ப. சிதம்பரம் குற்றச்சாட்டு
புதுதில்லி,அக்.24 “கரோனா தொற்றின் தாக்கம், ஊரடங்கு, பொதுமுடக்கத்தால் சரிவடைந்த இந்தியப் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறுவதற்கான வாசற் படியில் நிற்கிறது" என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், காணொளி மூலம்நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மூலதன திரட்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறி யிருந்தார்.அவரின் இந்த கருத்தை, அதேநாளில் ‘செபி’யின் தலைவர் அஜய்தியாகி, பொருளாதார விவ காரங்களுக்கான செயலாளர் தருண்பஜாஜ் ஆகியோரும் வெளிப் படுத்தி இருந்தனர். “சந்தைகளில் மீண்டும் மூலதனத்தை திரட்டுவது பரந்துபட்ட செயல்களின் அடிப் படையிலானது. அதில் சில சாதக மான அம்சங்கள் உள்ளன’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், இவர்கள் மூவரும் உண்மையைப் பேசவில்லை என் றும், ரிங் மாஸ்டரின் (பிரதமர் மோடி) கட்டளைக்கு ஏற்ப செயல் படும் சர்க்கஸ் சிங்கத்தின் நிலை யைத்தான் இவர்கள் பிரதிபலிப்ப தாகவும் மத்திய முன்னாள் நிதிய மைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலை வருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.இது தொடர்பாக சுட்டுரையில் அவர் தொடர் பதிவுகளை வெளி யிட்டுள்ளார். அதில், “செபி தலை வர், டி.இ.ஏ. செயலாளர் மற்றும் ஆர்பிஅய் ஆளுநர் சக்திகாந்த தாஸ்ஆகிய மூவரும் ஒரே நாளில் ஒரேவிஷயத்தில் பேசுகிறார்கள் என் றால், அது புதிரானதுதான்.. அதிலும் இவர்கள் மூவரும் பொரு ளாதாரத்தைப் பற்றியே பேச முயன் றுள்ளனர். பொருளாதாரம் எழுச்சி யடையும் என்று இவர்கள் கூறியி ருப்பது, ரிங்மாஸ்டரின் குச்சிக்கு ஏற்ப சர்க்கஸ் சிங்கம் நடந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது” என கிண்டல் அடித்துள்ளார்.
''இந்தியாவில் உள்ள குடும் பங்களில் பாதிக்குக் கீழாக உள்ள குடும்பங்களின் கைகளில் அர சாங்கம் பணத்தை வைத்து, ஏழை களின் தட்டுகளில் உணவை வைக் காவிட்டால் பொருளாதாரம் புத்தி சாலித்தனமாக புத்துயிர் பெறாது'' எனவும் ''இதனை முக்கிய பொறுப் புகளில் உள்ள இந்த மூன்று அதிகாரிகளும் ஒன்றாகச் சென்று நிதி அமைச்சரிடம் சொல்ல வேண் டும்'' என்றும் ப. சிதம்பரம் குறிப் பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment