ஊற்றங்கரை, அக். 8- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரையில் அமைந்துள்ள காவல்நிலை வளாகத்திற்குள் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும் இந்து கோவில் அமைக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சியை தடுக்க கோரியும், உடனடி யாக கோவில் கட்டுமானங்களை அகற்ற கோரியும் கடந்த 7.7.2020 அன்று காவல் துணை கண்காணிப்பாளரிடம் ஊற்றங்கரை ஒன்றிய கழகம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 12 மணியளவில் ஊற்றங்கரை காவல் துணை ஆய்வாளர் அவர்கள் திராவிடர் கழக ஒன்றிய தலைவர் செ.பொன்முடி, ஒன்றிய செயலர் செ.சிவராஜ் அவர்களிடமும் விசாரணை நடத்தினார். மேற்படி விசாரணையில் அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் மத சின்னங்கள், கோவில்கள் நிறுவ உள்ள தடை குறித்த அரசு ஆணைகள், சுற்றறிகைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
விளக்கத்தை ஏற்றுக்கொண்ட காவல் துணை ஆய் வாளர் ஊற்றங்கரை காவல் நிலையத்திற்குள் எந்தவித மத சின்னங் களோ, கோவில்களோ அமைக்கப்படாது எனவும் கட்டப்பட்டுள்ள கட்டுமானத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள தாக தெரிவித்தார். காவல் துணை ஆய்வாளரின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டு ஊற்றங்கரை ஒன்றியக் கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இயற்கை தயாரிப்பாக புதிய நிறமி அறிமுகம்
மதுரை, அக். 8- இந்தியச் சந்தையில் தற்போது விற்பனையாகும் தலைமுடிக்கான நிறமி - தலைமுடியை நிறம் மாற்றும் பொருள் - என்றவுடன் நமது நினைவுக்கு வரும் அளவு தனக்கென தனி அடையாளத்தைப் பெற்றுள்ள வாஸ்மால் (Vasmol), தற்போது இயற்கையாக மூலிகைகள் நிறைந்த ஷாம்பு வடிவில் தலைமுடிக்கான புதிய நிறமியை வாஸ்மால் ஆயுர்பிராஷ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. அதன்மூலம் தொடர்ந்து தலைமுடியின் நிறத்தைக் கருப்பாக வைத்திருக்க முடிவதுடன், தலையில் உள்ள பழுப்பு நிற முடியை வேகமாக அடையாளம் கண்டு, பாதுகாப்பாக நிறம் மாற்ற முடிகிறது. ஷாம்பு வடிவிலான வாஸ்மால் ஆயுர்பிராஷ் நிறமியில் நெல்லிக்காய், செம்பருத்தி, வெந்தயம் மற்றும் கரிசலாங்கண்ணி போன்ற மூலிகைகளின் சாறும் கலந்திருப்பதால், அவற்றின் முழுமையான நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என அய்ஜீனிக் ஆராய்ச்சி நிறுவன இணை மேலாண் இயக்குநர் ஆசிஷ் கே சாப்ரா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment