ஒற்றைப் பத்தி - ‘பிராமணாள் ஸ்வீட்ஸ்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 3, 2020

ஒற்றைப் பத்தி - ‘பிராமணாள் ஸ்வீட்ஸ்!'

மத்தியில் பி.ஜே.பி. ஆட் சிக்கு வந்தாலும் வந்தது - உச்சிக்குடுமிகள் வெளியே தெரிய - நெளிய ஆரம்பித்து விட்டன!


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உச்சிக்குடுமிகளை வெளியே தெரியும் அளவுக்குப் பார்ப்பன வக்கீல்கள் நடமாட ஆரம்பித்துவிட்டனர்.


நெற்றிப் பட்டைகளும் சாங்கோபாங்கமாகப் பளிச் சிடுகின்றனவாம்! ‘‘பிராமணாள் ஸ்வீட்ஸ்'' Prepared by 100% Brahmins என்ற சொற்களோடு இணையத்தில் ஒரு விளம்பரம் வலம் வந்து கொண்டுள்ளது. இதனைக் கண்ணுற்ற தோழர் அந்தக் கடைக்காரரிடம் உரையாடியதும் இப்பொழுது இணையத்தில் உலாவருகிறது.


பிராமணாள் ‘ஸ்வீட்' சுவை யாக இருக்கிறதோ இல் லையோ, இந்த உரையாடல் ‘ஸ்வீட்டாக' இருக்கும். ஆனா லும், பார்ப்பனர்களின் கசப் பான போக்கு வேகம் காட்ட ஆரம்பித்துவிட்டது.


இதோ அந்த உரையாடல்:


நான்: ஹலோ...


மறுமுனைப் பெண்: ஹலோ சொல்லுங்க சார்


நான்: பிராமணாள் ஸ்வீட் ஸ்ங்களா?


ம.பெண்: ஆமாங்க...


நான்: ஒரு கிலோ ஸ்வீட் எவ்வளவுங்க?


ம.பெண்: 490 சார்.


நான்: இது முழுக்க பிரா மணாள் தான் தயாரிச்சதாங்க?


ம.பெண்: ஆமாங்க...


நான்: சரிங்க, எனக்கு ஒரு பத்து கிலோ ஸ்வீட் வேணும், கூடவே தயாரிக்கிறவங்க பர்த் சர்ட்டிபிகேட் அனுப்புறீங்களா?


ம.பெண்: இருங்க ஒரு நிமி ஷம், சார்கிட்ட குடுக்கிறேன்.


சார்வாள்: ஹலோ


நான்: சார், பத்து கிலோ பிராமணாள் ஸ்வீட் வேணும், கூடவே பாக்கெட் பண்றவா, அடுப்பு எரிக்கிறவா, மாவு பிசையறவா, டெலிவரி பண் றவா, பாகு காய்ச்சுறவா "பர்த் சர்ட்டிபிக்கெட்" எல்லாம் வேண்டும்.


சார்வாள்: உங்களுக்கு என்ன வேணும்?


நான்: எனக்கு இது முழுக்க பிராமணாள் மட்டுமே செஞ்ச ஸ்வீட்னு ப்ரூப் பண்ணனும் சார், பல்க் ஆர்டர் ஒன்னு இருக்கு.


சார்வாள்: சரி ஆர்டர் குடுங்க......


நான்: பிராமணாள் மட்டும் செஞ்சதை அவா மட்டும் சாப்பிட வேண்டியது தானே சார், விக்கிறதுக்கு மட்டும் சூத்திரா, பஞ்சமா எல்லாரும் வேணுமா சார், விளம்பரத்துக் குப் பிராமணாளா??? கீழே பிராமணாளுக்கு மட்டுமே விற்கப்படும்னு போட்டிருந்தா சரியா இருந்திருக்குமே சார்?


சார்வாள்: டிஸ்கனெக்ட்டிங் அண்டு டொய்ங் டொய்ங் டொய்ங்.


(பிராமணாள் ஸ்வீட்ஸ், Prepared by 100 % Brahmins  என்ற சொற்றொடரோடு இணையத்தில் வலம் வரும் விளம்பர எண்களைத் சற்று முன் தொடர்பு கொண்டபோது நிகழ்ந்த உரையாடல். நீங்களும் முயற்சி செய்து அவாளைக் கலாய்க்கலாமே........ மானுட நாகரீகத்தின் முதல் எதிரிகளான இனவெறியும், வர்ண வன் மமும் கொண்ட இத்தகைய மனிதர்களை அவர்களின் ஜாதிவெறி வணிகத்தைக் கண் டிப்போம்).


எப்படி இருக்கு?


 - மயிலாடன்


No comments:

Post a Comment