பிளாஸ்டிகை உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 24, 2020

பிளாஸ்டிகை உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்


ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருள்கள் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படு கின்றன.  அதில் சில பிளாஸ்டிக் பொருள்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படு கின்றன. மீதமுள்ள பொருள்கள் ஆங் காங்கே அப்படியே பூமியில் புதைக்கப் படுகின்றன அல்லது கடலில் கொட்டப்படும் அவலநிலை தான் உள்ளது என்பதை நாம் அறிவோம். விஞ்ஞானிகளின் கூற் றுப்படி, பிளாஸ்டிக் கழிவுகள் சிதைவ டைய (decompose) கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் எடுக்கும். தற்போது ஆராய்ச் சியாளர்கள் கண்டுபிடித்த ஒரு வகை பூஞ்சைகள் சில மாதங்களில் பிளாஸ் டிக்கை உணவாக உட்கொண்டு சிதைவ டையச் செய்கின்றன.


அமேசான் வனப்பகுதியில் இருக்கும் பெஸ்டலோட்டியோப்சிஸ் மைக்ரோஸ் போரா ''Pestalotiopsis microspora"  எனும் ஒரு வகை பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை மக்கச் செய்து அதை உண்பதாகத் தெரி வித்துள்ளனர். 


யேல் பல்கலைக் கழக  (Yale University) நுண் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள்.


ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைக் கூடத்தில் Polyester Polyurethane (PUR) -அய் உணவாக உட்கொள்ளும் பூஞ்சைகளை (Fungi) அதிகமாக வளரச் செய்து இந்த சோதனையை நிகழ்த்தி உள்ளனர்.


"இந்த வகைப் பூஞ்சைகள்/ காளான்கள் இரண்டு மாதத்தில் சிறிய அளவிலான பிளாஸ்டிக்கை மக்கச் செய்து கரிம உர மாக (organic compost)    மாற்றுகின்றன. எதிர் காலத்தில் இந்த முறையைப் பயன் படுத்தி அதிகளவில் பிளாஸ்டிக் குப்பை களைச் சூழலியலுக்கு ஏற்றவாறு மாற்ற முடியும்" என்றார்கள்.


No comments:

Post a Comment