கொல்லப்பட்ட பெண்ணின் தந்தையை மிரட்டிய ஆட்சியர்... வீடியோ ஆதாரங்கள் வெளியாயின
புதுடில்லி, அக்.3 உ.பி. மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இளம்பெண், ஜாதி ஆதிக்க வெறியர்களால் மிகக் கொடூர மாக பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவம், நாட்டையே அதிர்ச் சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இச்சம்பவத்தில் குற்றவாளிகள் கடுமை யாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று அரசியல்கட்சிகள், திரைக்கலைஞர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், சாமியார் ஆதித்யநாத் தலைமை யிலான உ.பி. பாஜக அரசோ, குற்றவாளிகளைப் பாதுகாக்க தீவிரமாக முயன்று வருகிறது. தாழ்த்தப்பட்ட இளம்பெண்ணின் உடலை அவரது பெற்றோரிடம் தராமல், அவசர அவ சரமாக தாங்களாகவே எரித்துச் சாம்பலாக் கியதுடன், இளம்பெண் வல்லுறவே செய்யப் படவில்லை என்றும் வாதிட்டு வருகிறது. அவ்வாறே கூறுமாறு, பெண்ணின் பெற்றோ ரையும் மிரட்டி வருகிறது.
இந்நிலையில், வாக்குமூலத்தை மாற்றித் தரச்சொல்லி, ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியரான பிரவீன்குமார் லக்ஸ்காரே நேரடியாகவே, பெண்ணின் தந்தையை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“எனது மகளின் மரணத்தையொட்டி, இங்கு வந்திருக்கும் ஊடகங்கள் இன்னும் ஒருநாளிலோ அல்லது இரண்டு நாளிலோ கிளம்பிச்சென்று விடுவார்கள். அதன் பிறகு, இங்கு நீங்களும், நாங்களும் மட்டும் இருக்கப் போகிறோம். எனவே, நான் கூறுவதை கூறி விட்டேன். இனி வாக்குமூலத்தை மாற்றிக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்'' என்று அந்த வீடியோவில் ஆட்சியர் பிரவீன்குமார் லக்ஸ்காரே மிரட்டுகிறார். இது உ.பி. பாஜக அரசின் அராஜகத்தை அம்பலப் படுத்தியுள்ளது.
இதேபோல அப்பெண்ணின் அண்ணி பேசும் வீடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது.
அதில், “உ.பி. அரசுத் தரப்பு எங்கள் மீது அழுத்தத்தைக் கொடுக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பால், எங்களது பெண் உயிரி ழந்ததாகக் கூறினால் நிவாரண உதவித் தொகையாவது கிடைக்கும். அதைவிடுத்து வல்லுறவு என்று கூறாதீர்கள் என எனது மாமனாருக்கு மிரட்டல்கள் வருகின்றன'' என்று அவர் கண்ணீர் விடுகிறார்.
இந்த இரு வீடியோக்களும், ஹத்ராஸ் பாலியல் வன்கொலை சம்பவத்தில், உ.பி. பாஜக அரசு அரங்கேற்றும் அயோக்கியத் தனங்களை வெளிச்சம் போட்டுள்ளன.
No comments:
Post a Comment