இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு அதிக ஆபத்து
புதுடில்லி, அக்.6 உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ்சம்பவம் இந்தியாவைத்தாண்டி உலகம் முழுவதும் கடும் அதிர் வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து அய்.நா. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘ஹத்ராஸ் சம்பவம் ஒரு படிப்பினையைத் தந்துள்ளது. சமூக, பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டபெண்கள் அதிகம் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பதைப் புரிய வைத்திருக்கிறது. குறிப் பாக இந்தியாவில் தலித் பெண்கள் மிகுந்த ஆபத்தில் உள்ளனர். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது இந்தியாவின் அவசரத் தேவையாகவும் உள்ளது’ என அய்.நா. தனது அறிக்கையில் கூறியுள்ளது.
No comments:
Post a Comment