ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:



  • மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நான்கு மசோதாக்களை பஞ்சாப் அரசு நிறைவேற்றியது. இதன்படி, அம் மாநிலத்தில் குறைந்தபட்ச ஆதார விலைக்குக் கீழ் யாரும் நெல் அல்லது கோதுமை கொள்முதல் அல்லது விற்பனை செய்ய முடியாது. மீறினால், மூன்று ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை யும் அபராதமும் விதிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது.

  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை நடத்தாமல், மாவட்டக் குழுக்களை மத்திய அரசு உருவாக்குவது நியாயமான செயல்பாடு அல்ல என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

  • மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையில் மக்கள் கோவிலுக்கு வர நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில்  நாடு முழுவதும் அனை வரும் அதனைப் பின்பற்ற வேண்டும். பீகார் தேர்தலிலும் தேர்தல் ஆணையம் இதனை உறுதிப்படுத்த வேண்டும்  என தலையங்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னை:



  • தமிழக அரசின் அய்ந்து அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளித்திட வலியுறுத்தினர்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • உ.பி.யில் ஹத்ராஸ் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை மரணத்தை அடுத்து காஜியாபாத் உள்ளிட்ட தேசிய தலைமை பிராந்தியம் என்று சொல்லப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த 230 பட்டியிலினப் பிரிவினர் ஹிந்து மதத்தில் இருந்து விலகி புத்த மதத்தைத் தழுவினர்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • வெறும் வார்த்தை ஜாலங்கள் தீர்வாகாது; மக்கள் கரோனா தொற்று குறித்து திட்டவட்டமான செயல்பாட்டை எதிர்பார்க்கிறார்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தி குறித்து, காங் கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.


தி டெலிகிராப்:



  • ஹத்ராஸ் பாலியல் மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப் பட்டவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஊரை விட்டு வெளி யேற்ற உறுதி பூண்டுள்ளதாகவும், உபி அரசு, அக்குடும்பத்தினர்க்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என சமூக ஆர்வலரும் நர்மதா அணைக்கட்டுக்கு எதிரான இயக்கத்தின் தலைவருமான மேதா பட்கர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • கரோனா தொற்று இன்னமும் நீங்கவில்லை. மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். அரசின் கட்டுப்பாடு விதிகளை மதிக்க வேண்டும் என பிரதமர் மோடியின் காணொளி உரைப் பேச்சில், பீகார் தேர்தலை முன்னிட்டு அவரது கட்சியினர் நடத்தும் பேரணிகளில் இந்த விதிகள் மீறப்படுவது குறித்து எதுவும் சொல்ல வில்லை. மோடியின் பேச்சை நிரகாரியுங்கள் என்று டிவிட்டரில் வெளியான செய்தி முன்னிலையில் இருந்தது.


- குடந்தை கருணா


21.10.2020


No comments:

Post a Comment