வலசை செல்லும் வண்ணத்துப் பூச்சிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 24, 2020

வலசை செல்லும் வண்ணத்துப் பூச்சிகள்

(மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி நகரும் பட்டாம்பூச்சிகள் நமக்கு பருவ நிலை மாற்றத்தை உணர்த்துகின்றன.  மகரந்தச் சேர்க்கை அதன் மூலம் கதிர் பிடித்தல் என மனித வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய பட்டாம்பூச்சிகள் தொடர்பான அறிவியல் கட்டுரை)



தென்னிந்தியாவில் நிகழும் இயற்கை அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது பட் டாம் பூச்சிகளின் இடம்பெயர்வு. ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சி கள் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே பயணமாகும். இதற்கான அறிவியல் பூர்வமான காரணங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவை அனைத்தும் ஆரம்ப நிலையில் தான் உள்ளது.


ஒவ்வொரு வருடமும் இந்த பட்டாம் பூச்சிகளின் இடம் பெயர்தலைக் கணக்கெ டுக்க, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, ஏற்காடு, கொல்லிமலை போன்ற பகுதி களில் இருந்து பலரும் ஆர்வத்தோடு பங் கேற்கின்றனர். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டில், ஆகஸ்ட் மாதமே பட்டாம்பூச்சிகள் கிழக்குத் தொடர்ச்சி மலை களில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலை களை நோக்கி இடம் பெயரத் துவங்கி விட்டன. இந்த இடப்பெயர்வு பொதுவாக செப்டம்பர் - அக்டோபர் மாதங்களிலேயே நடைபெறும்.


இந்த துறையில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கூடப் பலரும் முன்வைக்கும் காரணம், பருவ மழை  தான். தென்மேற்குப் பருவமழை இந்தி யாவில், கேரளத்தில்  இருந்து தான் துவங்கு கிறது. அந்தக் காலக்கட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில் கடுமையான மழைப் பொழிவு ஏற்படும். பருவமழை ஆரம்பத் திற்கான அறிகுறிகள் தென் படவும், கடும் மழையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பட்டாம்பூச்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் தஞ்சம் அடைகின்றன. ”நீலம்பூர், பாலக்காடு கணவாய் வழியாக இந்த பட்டாம்பூச்சிகளின் இடம்பெயர்வை, குழு உறுப்பினர்கள் கண்டு கூறினால், அந்த பட்டாம்பூச்சிகள் கிழக்குத் தொடர்ச்சி மலை களை அடைந்து விட்டதா என்பதை அறிய அப்பகுதியில் தன்னார்வலர்கள் இருப்ப துண்டு” என்று கூறுகிறார் ஜெஸ்வின்.


”தேன் தரும் தாவரங்களின் எண் ணிக்கை (Butterfly Nectar food plants) மற்றும் தேவையின் அடிப்படையில் அவற்றின் இடம் பெயர்வு அமைந்துள்ளது. பருவ மழை பொழிவில் ஏற்படும் மாற்றங்கள், பட்டாம்பூச்சி இடம்பெயர்வில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.  கடந்த ஆண்டு பருவமழை மிகவும் தாமதமாகவே ஆரம்பித்தது. எனவே இடம்பெயர்வும் தாமதமாகவே ஆரம்பித்தது. எட்டு ஆண் டுகளுக்குப் பிறகு, இம்முறை, பருவமழை விரைவிலேயே முடிந்த காரணத்தால், பருவமழைக்குப் பிந்தைய பட்டாம்பூச்சி இடம்பெயர்வும் சீக்கிரமாக நிகழ்ந்தது” என்று கூறினார் அவர். கன்ஹா புலிகள் காப்பகத்தில் அமைந்திருக்கும் கிப்லிங் கேம்பின் ஹெட் நேச்சுரலிஸ்ட்டாக பணி யாற்றுகிறார் ஜெஸ்வின் கிங்ஸ்லி.


பருவமழைக்கு முந்தைய இடம் பெயர்வும், பருவமழைக்குப் பிந்தைய இடம் பெயர்வும் மேற்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்ததாகவே இருக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாத காலகட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து, சேர்வ ராயன்மலை (ஏற்காடு), கொல்லிமலை, பச்சைமலை, மற்றும் கல்வராயன்மலை களை நோக்கி சீராகப் பயணமாகின்றன இந்த பட்டாம்பூச்சிகள். பருவமழை முடிந்த பிறகு செப்டம்பர் மாதம் பிற்பாதியில் மீண் டும் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி போன்ற தமிழகப் பகுதிகளிலும், பாலக்காடு கணவாய் வழியாக கேரளாவில் உள்ள வயநாடுக்கும், கர்நாடகாவில் மைசூரு, பெங்களூரு, கோலார், கூர்க் ஆகிய பகுதிகளுக்கும் பயணமாகும். இந்த ஆண்டு பருவமழைக்குப் பிந்தைய இடம் பெயர்தலின் போது அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி ஒரு மணி நேரத்திற்கு 1,060 பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நம் பகுதிகளில் நாம் தினமும் காக்கும் பட்டாம்பூச்சிகள் அனைத்தும் இடம் பெயர்வதில்லை.


டார்க் ப்ளூ டைகர்ஸ் (Dark Blue Tigers), ப்ளூ டைகர்ஸ் (Blue Tigers),  ப்ளைன் டைகர்ஸ் (Plain Tigers), ஸ்ட்ரைப்டு டைகர்ஸ் (Striped Tiger) ஆகி யவை இம்முறை அதிக அளவில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் இருந்து இடம் பெயர்ந்து வந்தன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு லட்ச கணக்கில் பட்டாம்பூச்சிகள் திரும்பி வந்தன. கல்லாறு, மேட்டுப்பாளை யம் பகுதிகளில் இப்படி பட்டாம்பூச்சிகள் திரும்பி வருவதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பருவமழைக்கு முந்தைய இடம்பெயர்வில் அதிக அளவு எமிக்ரெண்ட்  (Emigrant butterfly)  வகை அதிகமாக இடம் பெயர்ந்தது.


குறிப்பிடத்தக்க வகையில் க்றிம்ஸன் ரோஸ் (Crimson Rose) என்ற பட்டாம் பூச்சி கள், கோத்தகிரி பள்ளத்தாக்கில் இருந்து  பவானி சாகர் அணையைத் தாண்டி, சிறு முகை நோக்கிப் பயணம் செய்தன. இந்த பகுதியில் க்றிம்சன் ரோஸ் பட்டாம்பூச்சிகள் காணக் கிடைப்பது மிகவும் அதிசயமான ஒன்று.


பட்டர்ஃப்ளை மைக்ரேசன் ஆஃப் இந்தியா (Butterfly Migration of India)   என்னும் வாட்ஸ்ஆப் குழு மூலமாக தென்னிந் தியாவில் இருக்கும் பட்டாம்பூச்சி ஆர்வ லர்கள் இணைக்கப்படுகின்றனர்.  'தி நேச்சர் அண்ட் பட்டர்ஃப்ளைஸ்' என்னும் அமைப்பு கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து பட்டாம் பூச்சிகளுக்கான கணக்கெடுப்பில் ஈடு பட்டுள்ளது. ”ஒரு குறிப்பிட்ட  இடத்தில் இருந்து பட்டாம்பூச்சிகள் இடம் பெயரத் துவங்கினால் அதனை, ஒரு நிமிடத்திற்கு எத்தனை பறக்கின்றன என்பதைக் கணக் கிட்டு அடுத்த பகுதிக்கு தகவல்கள் அளிக் கப்படும். இவ்வாறு ஆரம்பம் முதல் இறுதி வரையில் பட்டாம்பூச்சிகள் நகர்வு எவ்வ ளவு என்பது  கணக்கிடப்படுகிறது” என்று கூறினார் ஜெஸ்வின்.


ஒவ்வொரு பகுதிகளிலும் வன உயிரினங் களைக் கண்காணிக்க சிறு சிறு குழுக்கள் இயங்கி வருகின்றன. அவை அனைத்தை யும் ஒன்றிணைத்து பெரிய வகையில் இந்த சர்வே நடத்தப்படுகிறது. டி.என்.பி.எஸ், அனைத்து வனத்துறை கோட்டங்களுடன் இணைந்து இந்தக் கணக்கெடுப்பினை நடத் துகிறது. இந்த இடம் பெயர்வு மட்டுமல்லா மல், எந்தப் பகுதிகளில் எவ்வகையான பட்டாம் பூச்சிகள் இருக்கின்றன என்பது முதல் முழுமையான  தரவுகளை அவர்கள் பதிவு செய்து வருகின்றனர் என்று கூறு கிறார் ஜெஸ்வின்.


நம்முடைய அண்டை மாநிலமான கேரளத்தில் வனத்துறையினர் பல்வேறு உயிரினங்களின் கணக்கெடுப்பை நடத்து கின்றனர். தும்பி, தவளை, பாம்புகள், பட்டாம்பூச்சி என்று ஆர்வமாக அங்கே கணக்கெடுப்புகள் நடைபெறுகிறது. தமிழ கத்திலும் அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் வனவிலங்குகள் குறித்த ஆர்வம் மக்களுக்கு ஏற்படும். இந்த முறை ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வ லர்களுடன் பறவைகள் மற்றும் பட்டாம் பூச்சிகளுக்கான கணக்கெடுப்பு நடை பெற்றன.  இதில் 135 பறவைகள் மற்றும் 118 பட்டாம்பூச்சிகள் இனம் கண்டறியப்பட்டது.  இது போன்று தொடந்து பல்வேறு உயிரி னங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment