ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பாதுகாக்கும் பணி தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 14, 2020

ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பாதுகாக்கும் பணி தீவிரம்

தூத்துக்குடி, அக். 14- ஆதிச்ச நல்லூரில் அகழாய்வு பணி யில்  கண்டுபிடிக்கப்பட்ட 27 முதுமக்கள் தாழிகளையும் பாதுகாக்க தொல்லியல் அலுவலர் கள் நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண் டம் அருகே ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ஆம் தேதி அகழாய்வுப் பணி துவங்கியது. இந்த பணி கடந்த செப்டம் பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அகழாய்வு பணியில் 27 முது மக்கள் தாழிகள், பானைகள், தமிழ் பிராமி எழுத்துகள் என 500-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டன.


இந்நிலையில் மதுரை உயர்நீதிமன் றத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காம ராசு தொடர்ந்த வழக்கு கடந்த 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 2004 நடந்த ஆதிச்சநல்லூர் அறிக்கையை உடனேவெளியிட வேண்டும் என அறி வுறுத்தியுள்ளனர். வரும் 16ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையில் மத்திய தொல்லியல் துறையினர் தொல்லியல் படிப் புக்கு தமிழை புறக்கணித்த வகைக்கு கடும் எதிர்ப்பு தமிழர்கள் மத்தியில் கிளம்பியது. நீதிபதிகளும் இதை வன்மை யாக கண்டித்தனர்.


இந்நிலையில், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தற்போது அகழாய்வு பொருட்களை பாதுகாக்கும் பணி விரை வாக நடைபெறுவது தொல்லியல் ஆர் வலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment