கோலாலம்பூர், அக்.17- மலேசிய லைநகரில் இருந்து சுமார் இருநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கெமாயான் அரசு தமிழ்ப் பள்ளி யில் சுமார் 5 நூல்கள் கொண்ட நூலகம் தோட்ட நிர்வாகிகள் மன்ற (சபா) தலைவரும், மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவருமான மு. கோவிந்தசாமி அவர்களால் திறக்கப்பட்டது. பெரி யாரின் சமூக சீர்திருத்த மற்றும் தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய அரும்பணிகள் விவ ரிக்கப்பட்டது.
இந்த பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களும் பனி ரெண்டு ஆசிரியர்களும் உள்ளனர். தலைமை ஆசிரியர் நிறைமலி சிவ காமி டத்தோ சின்னதம்பி, துணைத் தலைமை ஆசிரியர்கள், ஆசிரி யர்கள், மாணவர்கள், பெற்றோர் கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப் பித்தார்கள்.
பெரியார் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. மாணவர்கள் பெரியார் பற்றிய செய்திகளை வாசித்தனர். பெரியார் வேடம் பூன்ற மாணவரும் வலம் வந்து சிறப்பித்தார். ஆசிரியர்களுக்கு பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கி. வீரமணியின் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு முதுபெரும் பெரியார் தொண்டர்கள் கோ.ஆவுடையார், கு.க. இராமன் சார் பில் பெரியார் பிஞ்சு இதழ்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment