தருமபுரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி முன்னாள் துணைத் தலைவர் முருகேசன் அவர்களின் தந்தையும், பண்ட அள்ளி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியுமான வி.கே.சித்தப்பசெட்டி (வயது 98) அவர்கள் 22-10-2020 அன்று மதியம் 1.30 மணி அளவில் இயற்கை எய்தினார். அவருக்கு தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மாவட்ட தலைவர் வீ.சிவாஜி அவர்கள் தலைமையில், மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல செயலாளர் கரு.பாலன், தருமபுரி நகர செயலாளர் மு.பரமசிவம், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் பீம.தமிழ் பிரபாகரன், மாவட்ட ப.க. அமைப்பாளர் கதிர்.செந்தில், மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட திமுக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி சார்பில் அவரது மகன் மருத்துவர் சங்கர், திமுக ஒன்றிய செயலாளர் சண்முகம், திமுக பிரமுகர்கள் ராஜகோபால், பிரபாகரன், உதயசூரியன், கே.துரை சாமி, AITUC, பாண்டுரங்கன், சித்தன் ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினர்.
Saturday, October 24, 2020
கழகத் தோழர் மறைவுக்கு வீரணவக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment