இளம்வயது பெண் கூட்டு பாலியல் வல்லுறவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 3, 2020

இளம்வயது பெண் கூட்டு பாலியல் வல்லுறவு


உத்திரப் பிரதேசத்தில் இளம்வயது பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறார்.


அந்தப் பெண் முசாகர் என்ற பட்டியல் சாதி பெண்ணாம்.


கொன்றவர்கள் உபி.முதல்வர் சாமியார் ஆதித்யநாதின் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் அவரின் தூரத்து உறவினர் வேறு.  .தாக்கூர் சாதி உயர்ஜாதியினர்


உத்திரப் பிரதேசத்தின் நிலவுடமையின் கோர முகத்தை இன்றும் உத்திரப் பிரதேசம் உத்தராகண்ட் மத்தியப் பிரதேசங்களில் காண லாம்.  அங்கு வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது.


தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க  வேண்டும், தாழ்த்தப்பட்ட பிரிவினர்களின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும். முசாகர்களின் வீடுகள் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடு களை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்.


முசாகர்கள் வயலில் இருக்கும் எலியை பிடித்து உணவாக உண்பார்கள். எலியைத் திண்பதால் அவர்களது வீடுகளும் எலி நுழைவதைப் போலவே இருக்க வேண்டும் என்பது இன்றைய தேதி வரை அங்கு நீடிக்கும் ஏற்பாடு.


கதவுகளும் அவ்வாறே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால், முசாகர் களின் வீட்டுக்குள் நுழைவது என்பது எலி வலைக்குள் நுழைவது போலத்தானிருக்கும்.


இந்த மக்கள் தான் சாதிக் கொடுமையால் ஊர்களை விட்டு ஓடி, குடும்பம் குடும்பமாக டெல்லி, நொய்டா போன்ற இடங்களில் பிளாட் பார வாழ்க்கை நடத்துபவர்கள்.குடியிருப்புகள் அமைந்திருக்கும் திசைகூட காற்றின் திசைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டும்.


 அதாவது தாழ்த்தப்பட்டமக்களின் குடியிருப்பைக் கடந்து மேல்சாதியினரின் குடியிருப்புக்குக் காற்று கூட செல்லக் கூடாது. ஓலைக் குடிசையாய் இருந்த தனது வீட்டை ஒரு முசாகர் காரை வீடாக கட்டியதற்காக சமீபத்தில் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் முன்னின்று அனுமதி இல்லாமல் கட்டிய கட்டிடன் என்று கூறி இடித்துத் தள்ளியது தொலைக்காட்சியில் வெளியானது


No comments:

Post a Comment