பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தொடரும் அவலம்
லக்னோ,அக்.2, பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது.
ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த் தப்பட்ட வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண், கடந்த 14ஆம் தேதி அன்று தனது தாயுடன் சென்ற போது, ஜாதி ஆணவ வெறியர்கள் நால்வரால் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிருக்குப்போராடிய அவர் டில்லி சப்ஜர்தங் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி கடந்த 29.9.2020 அன்று உயிரிழந்தார். அப்பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழு வதும் போராட்டம் வெடித் துள்ளது.
அப்பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் அர சியல் கட்சித்தலைவர்கள், பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மற்றொரு பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரி ழந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பால்ராம்பூர் மாவட் டத்தைச் சேர்ந்த 22 வயது தாழ்த் தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 29ஆம் தேதி வழக்கம் போல் பணிக்குச் சென்றுள்ளார். ஆனால், அவர் அன்று வீடு திரும்ப வில்லை. மாறாக அடுத்த நாள் நேற்று 30ஆம் தேதி இரவு கையில் குளுக்கோஸ் ஊசியுடன் உடல் நிலை மோசமான நிலையில், வீடு திரும்பினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணையில் அவர் இரண்டு நபர்களால் கூட்டு பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சம் பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத் தினர் அளித்த புகாரின் அடிப் படையில், இரண்டு நபர்களை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment