எஸ்.பி.அய். வங்கிப் பணி முதல்நிலைத் தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கு குறைவான கட்ஆப் மதிப்பெண்கள் வழங்குவதா?
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை, அக். 24- எஸ்.பி.அய். வங்கிப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு-இடஒதுக்கீட்டுப் பிரிவினரை விடக் குறைவான கட்-ஆப் மதிப்பெண்கள் வழங்குவதா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நேற்று (23.10.2020) வெளியிட்ட அறிக்கை: எஸ்.பி.அய். (இந் திய ஸ்டேட் வங்கி) ஜூனியர் அசோசியேட்ஸ் பணிகளுக் கான முதல் நிலைத் தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங் கிய முன்னேறிய வகுப்பினர்- பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பழங்குடியினத்தவரை விடக் குறைந்த கட் ஆப் மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற் றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆயில் இந்தியா லிமி டெட்டில் சீனியர் செக்யூ ரிட்டி ஆபீஸர் மற்றும் சீனி யர் மெடிக்கல் ஆபீஸர் உள் ளிட்ட பல்வேறு பணிகளுக் கான தேர்வுகளுக்கு விண் ணப்பிக்க பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப் பினருக்கு கட்டணம் ஏது மில்லை என்றும், பிற்படுத்தப் பட்டவர்கள் மட்டும் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக் கப்பட்டிருப்பது இன்னொரு அநீதி.
ஒருபுறம் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வேலை வாய்ப்பைப் பறித்து -இன் னொரு பக்கம் பொருளா தாரத்தில் பின்தங்கிய முன் னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் விரைந்து நடத்தாமல் தாமதப்படுத்தி வரும் மத்திய பாஜ அரசு, முழுக்க முழுக்க இட ஒதுக் கீட்டுக் கொள்கைகளுக்கு எதிரானது என்பது தினமும் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 10 சதவீத இடஒதுக்கீடு நிச்சயம் ரத்து செய்யப்பட வேண்டும்.
இதைத் தட்டிக்கேட்கத் தயங்கி நிற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமி ழக இளைஞர்களுக்கு மன் னிக்க முடியாத துரோகத்தைச் செய்து வருகிறார். சமூகநீதிக் குப் போகிறபோக்கில் இன் னொரு துரோகத்தைச் செய் வதற்கு மத்திய பாஜக அரசு டன் பழனிசாமி திரைமறை வில் கைகுலுக்கிக் கொண்டி ருக்கிறாரா? சமூகநீதி வரலாற் றில் இது போன்ற வரலாற்றுப் பிழைகளுக்குத் துணை போகும் அதிமுகவும், அதன் ஆட்சியும் அடியோடு தமிழக மக்களால் நிராகரிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரிக்க விரும்புகி றேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment