டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
- அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக 70 சதவீத அமெரிக்க வாழ் இந்தியர்கள் வாக்களிப்பார்கள் என லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
- மும்பை திரையுலக நடிகர் சூசாந்த் சிங் மரணம் குறித்து வட இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் அளவுக்கு மீறி செய்திகளை கூறுவது பற்றியும், ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில் அரசு சில நடைமுறைகளை உருவாக்கிட அறிவுறுத்தல்கள் இயற்றுவது பற்றியும் கருத்து கூறுமாறு மத்திய அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- அமெரிக்காவில் சென்று பணியாற்ற தரப்படும் ஹெச்.1.பி விசா தற்போது லாட்டரி முறையில் வழங்குவதை நிறுத்தி, நிறுவனங்கள் பணியாளர்களுக்கு அளிக்கும் ஊதியத்தைக் கணக்கில் கொண்டு வழங்கிட டிரம்ப் அரசு முடிவெடுத்துள்ளது.
- காஷ்மீரில் இனி இந்தியாவில் எவர் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை, உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அறிந்து செயல்படுத்த வேண்டும். இல்லை யென்றால் பெரும் பண முதலாளிகள் நிலங்களை அபகரித்திடும் அபாயம் உள்ளது என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் துவக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தரம் மிகக் குறைந்துள்ளது என ஆசார் அறிக்கையை அரசு கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என தலையங்க செய்தி கூறுகிறது.
- மருத்துவர்கள் தான் அரசியலில் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். அவரது உடல் நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவர் பெயரில் வந்த கருத்து உண்மைதான். என்றாலும் தான் வெளியிடவில்லை என்று மறுத்துள்ளார். ஆனால் திட்டமிட்டே இந்த கடிதம் வெளியிடப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டிற்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்பதாகக் கூறியுள்ளார்.
- அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் மதிப் பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்திடும் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக் காக காத்திருக்கும் சூழலில், இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- தமிழக அரசு இயற்றியுள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு, மாநில ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது என இது குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தி டெலிகிராப்:
- பீகார் மாநிலத்தில் முங்கேர் பகுதியில் துர்கா பூசைக்கான ஊர்வலத்தில் காவல் துறை சுட்டதில் இளைஞர் ஒருவர் இறந்தார். இதன் காரணமாக ஏற்பட்டுள்ள கலவரத்தையடுத்து, அப்பகுதியின் காவல்துறை எஸ்.பி., டி.எஸ்.பி ஆகியோரை பணியிடம் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
- குடந்தை கருணா
30.10.2020
No comments:
Post a Comment