எதிர்க்கட்சிகள் கண்டனம்
பாட்னா, அக்.24 பீகாரில் தங்கள் கூட்டணி வெற்றிபெற்றால் கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொற்று நோய்க்கான தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதைக்கூடதேர்தலில் வாக் குகளைப் பெறுவதற்கான விஷயமாக பாஜக மாற்றியிருப்பது படுமோச மான அரசியல் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
“பாஜக வாக்குறுதியைப் பார்த் தால், தேர்தலை எதிர்கொள்ளும் பீகார் மாநிலத்தை தவிர இந்தியாவின் மற்ற மாநில மக்கள் கரோனா வைரஸ் தடுப்பூசியை பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்களா?
இந்திய மக்கள் தங்கள் உயிர் களைக் காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசிக்கு பணம் கட்ட வேண் டுமா? இந்தியாவில் இதுவரை போலியோ, சின்னம்மை தடுப்பூசிகள் அரசாங்கத்தால் இலவசமாக வழங் கப்பட்டு வந்துள்ளன. இதை தற் போது மத்திய அரசு மாற்றப் பார்க் கிறதா?'' என்று காங்கிரஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளது.
உமர் அப்துல்லா
“கரோனா தடுப்பூசியை இலவச மாக வழங்குவதாக கூறும் பாஜக, அதற்காகும் செலவை தங்கள் கட் சியின் பணத்திலிருந்து எடுத்துத் தருமா?'' என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர், ஜம்மு_காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். “ஒருவேளை அரசின் கஜானாவி லிருந்துதான் என்றால்... அதனை நாடு முழுமைக்கும் தானே இலவச மாக தந்தாக வேண்டும்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்
“நீங்கள் வாக்களியுங்கள்; நான் தடுப்பூசி தருகிறேன் என்று கூறுவ தற்கு பாஜகவுக்கு வெட்கமாக இல்லையா..?'' என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கேட்டுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதாதளம் கண்டனம்
“மக்கள் நல அரசில், ஒரு தொற்றுநோய்க்கு தடுப்பூசி போடு வதாக உறுதியளிப்பது; தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக இருந் தால், அந்த அளவிற்கு அவர்களுடைய சிந்தனை கெட்டுப் போயிருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது” என்று ராஷ்ட்ரிய ஜனதாதள நாடா ளுமன்ற உறுப்பினர் மனோஜ்ஜா விமர்சித்துள்ளார்.
“பாஜக வெற்றி பெற்றால் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவோம் என்றால், பாஜக ஆளாத மாநில மக்களுக்கும், பாஜகவுக்கு வாக்களிக்காத இந்தி யர்களுக்கும் இலவச தடுப்பூசி கிடைக் காதா?" என்று ஆம் ஆத்மி கட்சி சந்தேகம் எழுப்பியுள்ளது.
“கரோனா தடுப்பூசியை தேர்தல் லாலிபாப் என்று கருதும் உலகின் ஒரேஅரசியல் கட்சி பாஜக-வாகத் தான் இருக்கும். கரோனாவுடன் பாஜகவின் தீய மனநிலைக்கும் சிகிச்சை தேவை'' என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் சாடியுள்ளார்.
சிவசேனா கண்டனம்
“தடுப்பூசி இன்னும் வரவே இல்லை. அதற்குள் பாஜகவின் தேர்தல் கால வார்த்தை ஜாலங்களில் தடுப்பூசி இடம்பெற்று விட்டது. எல்லா மாநில மக்களையும் சமமாக பார்ப்பது மத்திய அரசின் பொறுப்பு இல்லையா?" என்று சிவசேனா செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கேட்டுள்ளார்.
“அரசிய லுக்காக கரோனா தொற்றைப் பயன்படுத்தும் பாஜக தற்போது மரண பயத்தையும் விற் பனை செய்கிறது” என்றுராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி சாடியுள்ளது. “கரோனா தடுப்பூசி என்பது இந்தி யாவுக்கு சொந்தமானது. பாஜக-வுக்கு சொந் தமானது அல்ல!” என்று கூறியிருக்கும் அக்கட்சி, “மரண பயத்தையும் நோய் பயத்தையும் வியாபாரம் செய்ய பாஜக முடிவு செய்துவிட்டதாகவும், ஆனால், பீகார் மக்களுக்குசுய கவுரவம் உள்ளது” என்றும் குறிப்பிட் டுள்ளது.
No comments:
Post a Comment