கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கொடைவள்ளல் - திராவிடர் இயக்க உணர் வாளர் - தந்தை பெரியார், முத்தமிழறிஞர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர் மீது மிகுந்த பேரன்பும் பற்றும் கொண்டவர் - தொடர் விடுதலை வாசகர் திராவிடர் கழகத் தோழர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் - காவேரிப்பட்டணம் தந்தை பெரியார் சிலை அமைக்க புரவலராக இருந்தவர் காவேரிப்பட்டணம் பிரபல தொழிலதிபர் கே.வி.எஸ் (எ) கே.வி.சண்முகம் (வயது 93) உடல்நலக்குறைவால் 14.10.2020 அன்று இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னா ரது மறைவு செய்தி அறிந்த உடனே தருமபுரி மண்டல திராவிடர் கழகச் செயலாளர் கோ.திராவிடமணி, கிருட்டினகிரி மாவட்ட அமைப்பாளர் தி.கதிரவன், ஒன்றியத்தலைவர் சி.சீனிவாசன் உள்பட கழகத்தோழர்கள் சென்று திராவிடர் கழகம் சார்பில் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். பாலக்கோடு சாலை எர்ரசீகரலஅள்ளி கிராமத்திலுள்ள அவரது பண்ணை தோட்டத்தில் அன்னாரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment