ஜோதிடர்கள், ஓலைச்சுவடி பார்ப்பவர்களும் தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 17, 2020

ஜோதிடர்கள், ஓலைச்சுவடி பார்ப்பவர்களும் தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை

தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு


புதுடில்லி, அக். 17- பீகார் சட்ட மன்றத் தேர்தல் அக்டோபர் 28 ஆம் தேதி, நவம்பர் 3 ஆம் தேதி,நவம்பர் 7 ஆகிய தேதி களில் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.


இந்நிலையில் சட்டமன் றத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட விதிக் கப்பட்டுள்ள தடை ஜோதி டர்கள், ஓலைச்சுவடி பார்ப் பவர்கள், அரசியல் ஆய்வா ளர்கள் ஆகியோருக்கும் பொருந்தும் என்றும் அவர் களும் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.


ஆளும் கட்சி கூட்டணி யில் உள்ள பாஜகதேர்தல் செலவுக்கு வரம்பை மீறி பணத்தைபெருமளவில் இறக்கிவிட்டுள்ள நிலையில், இவற்றின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி யுள்ளன.


இந்நிலையில் வாக்குப்பதி வுக்கு முந்தைய நாளில் இருந்து எந்தவிதமான கருத் துக்கணிப்பு முடிவுகளையும், கட்டுரைகளையும், வெளியிட ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள் ளது.இந்நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கம் வருமாறு:


கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதிமக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பிரிவு 126ஏ-ன் படி தேர்தலுக்கு முந்தைய நாளில் இருந்து எந்த கருத்துக்கணிப்பு முடிவு களை அறிவிக்கவோ, பிரசுரிக் கவோ, பரப்பவோ கூடாது. தேர்தல் ஆணையம் குறிப் பிட்டுள்ள காலக்கெடுவரை இந்தத் தடை உத்தரவு பொருந்தும்.இந்தத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடும் தடை அச்சு, செய்தி சேனல்களுக்கு மட்டு மல்ல, ஜோதிடர்கள், ஓலைச் சுவடி, கார்டுகள் மூலம் கணித் துச் சொல்பவர்கள், அரசியல் ஆலோசகர்கள், ஆகியோருக்கும் பொருந்தும். அவர்களும்தேர்தல் முடிவு கள் குறித்து கருத்துகளை வெளியிடக்கூடாது. அவ் வாறு வெளியிடுவோர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட் டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி அக்டோபர் 28ஆம் தேதி காலை 7 மணி முதல்,நவம்பர் மாதம் 7ஆம் தேதி மாலை 6.30 மணிவரை அச்சு, செய்தி சேனல்கள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் முடிவு குறித்த கருத்துக்களை வெளியிடக்கூடாது. நேர்மையாக வும், சுதந்திரமாகவும், தேர்தல் நடைபெற ஒத்துழைக்க வேண்டும்.


இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment