சென்னை,அக்.6, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருநங்கை, திருநம்பி ஆகிய மூன்றாம் பாலினத்தவர் களுக்கென தனிப் பிரிவு ஒன்றை உருவாக்கி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அமைந்தகரையைச் சேர்ந்த கிரேஸ் பானு என்ற திருநங்கை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் (அக்.5) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் கூறுகையில், இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மூன்றாம் பாலினத்த வர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்குவதாகத் தெரிவித்திருப்பதை சுட்டிக் காட்டினார். தொடர்ந்து, குறிப்பிட்ட மூன்றாம் பாலினத்தவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால், அவ ருக்கு பல சலுகைகள் மறுக்கப்படுவதாகவும், திருநங்கைகள் நலவாரியத்தில் அரசுத் துறையினர் மட்டுமே இடம் பெற்றுள் ளதாகவும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த பிரதிநிதித் துவமும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட் டினார். இதையடுத்து, வரும் அக்டோபர் 29 ஆம் தேதிக்குள் இது குறித்து பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
பிரியங்கா ஆடையை இழுத்த விவகாரம்:
உ.பி. காவல்துறை உரிய விளக்கம் அளிக்க
தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
புதுடில்லி,அக்.6, உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் கடந்த 3.10.2020 அன்று ஹத்ராஸ் சென்றனர்.
தொண்டர்களுடன் படைசூழ சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஆண் காவலர் ஒருவர் பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினார்.
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் “பிரியங்கா காந்தியிடம் காவலர் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது. உணர்வற்ற இந்த நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த பிரச்சினையின் தீவிர தன்மையை உணர்ந்த ஆணையத்தின் தலைவர் ஷர்மரேகா இதுபற்றி உத்தரப்பிரதேச காவல்துறை உடனடியாக விளக்கம் அளிக்க வலியுறுத்தி உள்ளார்” எனக் கூறப்பட் டுள்ளது. இதனிடையே பிரியங்கா காந்தியின் ஆடையை பிடித்து இழுத்த விவகாரத்தில் உத்தரப்பிரதேச காவல் துறையினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment