தஞ்சாவூர், அக். 16-- தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அமைக்கப்பட்ட கூண்டை அகற்ற வலியுறுத்தி 13-.10.-2020 அன்று அனைத்துக்கட்சிப் பொறுப்பாளர் கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது
அதனடிப்படையில் நேற்று முன்தினம் (14-.10.-2020) முற்பகல் 11 மணியளவில் பெரியார்சிலை அமைந்துள்ள பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேஜ்முக்சேகர் சஞ்சய் ஆய்வு செய்து திராவிடர் கழகம் மற்றும் அனைத்துக்கட்சிப் பொறுப்பா ளர்களிடம் கலந்துரை யாடினார்.
கூண்டு அகற்றுவது தொடர் பாக மாவட்ட ஆட்சியரிடம் ஆலோ சனை செய்து நாங்களே அகற்றுகி றோம் அதுவரை பொறுமை காக்குமாறு வேண்டினார்
மாநகர தி.மு.க செயலாளர் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் T. K.G. நீலமேகம், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி, திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் செல்ல.கலை வாணன், மாநகர தி.மு.க துணைச் செயலாளர் R.K.நீலகண்டன், இரா மச்சந்தின், மாநில இளை ஞரணி துணைச்செயலாளர் இரா.வெற் றிக் குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண் டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இரா மலிங்கம், மாநகரத் தலைவர் பா. நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், விசிறி சாமியார் முருகன், தொழிலாளர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் யோகராஜ் உள்ளிட்டோர் வருகை தந்தனர் தஞ்சை நகர மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாரதிராஜா, சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட காவல் துறையினரும் உடனிருந்தனர்
No comments:
Post a Comment